பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புளியம் பழம்

நெருப்பு, படைப்பு, பருவம்,

பெண்மைக் கொள்கை,

முன்னறிதிறம், வலிமை, வளமை,

வாழ்வு, விடியல், விரைவு;

கழிகாமம், பித்து பிடித்த நிலை,

வஞ்சனை.

கூண்டுப்பறவை - சுதந்திரம்,

வீடுபேற்றிற்கான ஆர்வம்.

இடமிருந்து வலமாகப் பறத்தல் -

தோல்வி.

வீட்டுனுள் பறத்தல் - இறப்பு.

சிவப்பு நிறப்பறவை - தென்திசை.

நீல நிறப்பறவை - இயலாத

நிலை, கருத்துக்களின் இணைவு.

கறுப்பு நிறப்பறவை

அறிவாற்றல்.

புளியம் பழம் Puliyam palam

(tamarind)

(1) இழிவு - lowness / inferior

'அளிபுண் அகத்துப் புறந்தோல்

மூடி அடியேன் உடை ஆக்கை

புளியம் பழம் ஒத்து இருந்தேன்

இருந்தும் விடையாய் பொடி ஆடி'

(திருவா.25: 5: 1-4)

புற்றம் Purram (mound)

(1) வளம் - fertille

'இரை தேர் எண்கின் பகுவாய்

ஏற்றை, கொடு வரிப் புற்றம்

வாய்ப்ப வாங்கி ' (நற்.125: 1-2)

(ஆ) அரவு உறை புற்றம் Aravu

urai puram

(2) வன்மை - might / ability

'நல் அரா உறையும் புற்றம்

போலவும், .. .. .. .. மாற்று அருந்

துப்பின் மாற்றோர்'

(புறம்.309: 3-5)

(3) துன்பம், அச்சம் - affliction, fear

'அரவு உறை புற்றத்து அற்றே -

நாளும் புரவலர் புன்கண்

நோக்காது, இரவலர்க்கு அருகாது

ஈயும் வண்மை , உரைசால்

நெடுந்தகை ஓம்பும் ஊரே'

(புறம்.329: 6-9)


புறப்புண் Purappun (wound on the back)


புனல்



(1) அவமானம் - dishonour, shame

'தன்போல் வேந்தன் முன்புகுறித்து

எறிந்த புறப்புண் நாணி .. .. ...

(புறம்.65: 9-10)

புறவு Puravu (dove / pigeon)

(1) புன்மை - mean / low

'சிறுபுன் புறவொடு சிற்றெழால்

சீறு நெறியரு நீள்சுரத்து

அல்குவர் கொல் தோழீ!'

(திணை .ஐம்.15: 1-2) |

(2) அழகு - beautiful

'கோலப் புறவின் குரற்கூவிப்

புட்சிமிழ்த்தோன்' (இன்னிலை.3:1)

புனல் Punal (water / flood)

(1) இனிமை - sweet

'ஆங்கண் தீம் புனல் ஈங்கண்

பரக்கும்' (நற்.70: 7)

(2) தண்மை - cool)

'புது வறங்கூர்ந்த செறுவில்

தண்ணென மலி புனல்

பரத்தந்தா அங்கு, இனிதே தெய்ய'

(நற்.230: 8-10)

(3) காமம் - passion

‘சிறை அடு கடும் புனல் அன்ன,

என் நிறை அடு காமம்

நீந்துமாறே' (நற்.369: 10-11)

(4) ஒழுக்கு / இயக்கம் - flow / move

'புனலூடு போவது ஓர் பூ மாலை

கொண்டை ' (பரி.தி.2: 51)

(5) அழகு / விரைவு - beautiful, fast

'காமர் கடும் புனல் கலந்து

எம்மோடு ஆடுவாள்' (கலி.39: 1)

(6) பொதுமை - common

'வேனிற் புனல் அன்ன நுந்தையை

நோவார் யார்?' (கலி.85: 38)

(7) வண்மை - bountiful

'வண் புனல் தொழுநை வார்

மணல் அகன் துறை' (அகம்.59: 4)

(8) விரைவு - fast

'கல்லா யானை கடி புனல்

கற்றென' (அகம்.376: 2)

(9) அழிவு - destroying

'கொல் புனல் சிறையின்

விலங்கியோன் கல்லே'

(புறம்.263: 8)

(10) வளமை - fertile

'பூவும் பொன்னும் புனல்படச்

சொரிந்து' (புறம்.367: 5)

214