பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புனல்


நோயி லின்பக் காய் பல

தூங்கியாழ வற்புக்கனி யூழறிந்

தேந்த' (பெருங்.வத்.9:73-77)

(இ) நீர் வேட்கை Nir vetkai

(32) எதிர்நோக்கும் நிறைவு - expect

satisfaction |

'நீர் நசைக்கு ஊக்கிய உயவல்

யானை ' (நற்.171: 1)

(33) இன்றியமையாமை - necessary

'குவளை குறுநர் நீர் வேட்டாங்கு'

(நற்.332: 2)

(ஈ) நீராடுதல் Niratutal

(34) உவகை | தூய்மை - happiness

pure

பொங்கி வரு புதுநீர் நெஞ்சு உண

ஆடுகம்' (நற்.68: 5) (35) முயக்கம் - embrase

'கடும் புனல் மலிந்த காவிரிப்

பேரியாற்று நெடுஞ் சுழி நீத்தம்

மண்ணுநர் போல, நடுங்கு அஞர்

தீர முயங்கி ' (அகம்.62:9-11)

(உ) நீர் இயல்பு மாறல் Nir

iyalpu maral (change in water quality)

(36) அரிய தன்மை / இயல்பின்மை

- rare / unnatural

'... .. .. .. நீர்த்திப் பிறழினும்'

(குறு.373: 1)

(ஊ) அறல் Aral

(37) தெளிவு - clear

'தேம் படு சிலம்பில் தெள் அறல்

தழீ இய' (நற்.243: 1)

தண்மை - cool

வேய் பயில் இறும்பின் ஆம் அறல்

பருகும்' (நற்.213: 5)

வளம் - fertile |

'மலைகழிந் தன்ன மாக்கால்

மயங்குஅறல், பதவுமேயல் அருந்து

துளங்குஇமில் நல் ஏறு, மதவுடை

நாக்கொடு அசைவீடப் பருகி'

(அகம்.341: 6)

(ஏ) கழித்தலைப்பட்ட நீர்

Kalittalaippatta nir (whirl pool)

(37) சுழற்சி - whirl

புனல்


'கழித்தலைப் பட்ட நீரது போலச்

சுழல்கின்றேன் சுழல்கின்றதென்

உள்ளம்' (சுந் தேவா.692: 3-4)

(ஐ) சிறையழி புனல் Ciraiyali

punal (flood)

(39) விரைவு - quick, fast

'ஏற்றோர்த் தாக்கிக் கூற்றுறை

உலகினுள் உறைகுவிர் ஆயிற்

குறுகுமின் விரைந்தெனச்

சிறையழி புனலிற் சென்றுமேல்

நெருங்கி' (பெருங். உஞ்.46: 14-16)

(ஓ) உவர்த்த நீர் Uvartta nir

(40) பயனின்மை - useless / unworthy

'உவர்த்த நீர் போல எந்தன்

உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன்'

(நாலா.902: 3-4)

(ஓ) நீர்ப்படுத்தல் Nippatuttal

(41) தூய்மை , சின நீக்கம் - pure,

appease anger

'நயந்த கொள்கையில் கங்கைப்பேர்

யாற்றிருந்து நங்கை தன்னை

நீர்ப்படுத்தி வெஞ்சினந் தரு

வெம்மை நீங்கி வஞ்சிமா நகர்

புகுந்து' (சிலப்.29.1)

(ஔ) யாற்று நீர் Yarru nir

(42) துன்பம் -pine/ suffer

'உழந்தாலும் புத்தச்சொன் றிட்டூர்த

றேற்றா திழந்தார் பலரால்

இடும்பை நீர் யாற்றுள்'

(சீவக.2621: 1-2)

(ஒப்பு) Water அமைதி, அழகு,

அறிவுத்திறன், ஆழம், ஆன்மா ,

இளமையின் புத்துணர்வு,

இறைமை, இன்றியமையாமை,

ஈரம், உயர்வான தகுதி,

உள்ளுணர்வு சார்ந்த விவேகம்,

ஊடுருவும் தன்மை, எல்லையற்ற

தன்மை , ஒழுக்கம், கடந்து செல்

நிலை, கருணை, கரைவு, கற்பு,

குளிர்காலம், குளிர்ச்சி, தகுதி,

தூண்டுதல், தெய்வீக வாழ்க்கை ,

நிலைபேறு, , நினைவாற்றல்,

நெகிழ்வுத்திறன், நேர்மை,

படிவாக்கம், படைப்பு, பண்பு


216