பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புனிதனோடு காப்பு நாண் கட்டுதல்


குறித்த விவேகம், பதங்கமாதல்,

புண்ணியம், புதுமைப்படுத்தல்,

புனிதத்தன்மை, பெண்மைக்

கொள்கை, பெரும்பரப்பு, மகிழ்ச்சி,

மயக்கம், மறுபிறப்பு, மறைவு,

மும்மை , மெய்ந்நடப்பு,

வடக்குத்திசை, வலிமை, வளமை,

வாணிகம், விளைவளம், விழிப்பு;

அமைப்பற்ற தோற்றம், அழிவு,

ஆழங்காண முடியாத நிலை,

நம்பிக்கையற்ற தன்மை ,

நிலையாமை, வலிமையற்ற

தன்மை, வேதனை.

நீராடுதல் / நீராட்டுதல் - ஓய்வு,

கரைவு, தூய்மைப்படுத்துதல்,

தொடக்கம், பாதுகாப்பு, மென்மை,

வாழ்வின் மூலம்.

புனிதனோடு காப்பு நாண் கட்டுதல்

Punitanotu kappu nan kattutal (tie the band

of protection)

(1) திருமணம் - wedding

'நால் திசைத் தீர்த்தம் கொணர்ந்து

நனி நல்கி பார்ப்பனச் சிட்டர்கள்

பல்லார் எடுத்து ஏத்தி பூப் புனை

கண்ணிப் புனிதனோடு

என் தன்னைக் காப்பு நாண் கட்டக்

கனாக் கண்டேன்' (நாலா.559)

பூ Pu (flower)

(1) அழகு, நறுமணம் - beauty,

fragrance

‘புறவு அணி கொண்ட பூ நாறு

கடத்திடை ' (நற்.48: 5)

(2) பொலிவு - dazzling/ bright

'பூ இல் வறுந்தலை போல'

(குறு.19: 2)

(3) ஒளி, நறுமணம் – bright, fragrance

'நாற்றமும் ஒண்மையும் பூவையுௗ'

(பரி.4: 29)

(4) உயர்வு - lofty

'பூ மேம்பாடு உற்ற புனை

சுரும்பின்' (பரி.10: 36)

(5) இன்பம் - pleasure

'பொய்கைப் பூப் புதிது உண்ட

வரி வண்டு கழிப் பூத்த நெய்தல்

தாது அமர்ந்து ஆடி' (கலி.74: 1-2)

நிலையாமை / பலி - transcient /

Sacrifice


பூ


'பூப் பலி விட்ட கடவுளைக்

கண்டாயோ ?' (கலி.93: 24)

(7) வளம் - fertile

'பொரு கரை வாய் சூழ்ந்த பூ மலி

வையை' (கலி.98: 10)

(8) மென்மை - softness

'நுரை முகந்தன்ன மென் பூஞ்

சேக்கை ' (அகம்.93: 13)

(9) இனிமை, இன்பம் - delightful,

enjoyment

'மலைதற்கு இனிய பூவும் காட்டி'

(மலை .283)

(10) புணர்ச்சி

'மாட்சி நீரின் மாண்சினை

பல்கிய வேட்கை என்னும்

விழுத்தகு பெருமரம் புணர்ச்சிப்

பல்பூ இணர்த்தொகை ஈன்று

நோயி லின்பக் காய் பல

தூங்கியாழ வற்புக்கனி யூழறிந்

தேந்த' (பெருங்.வத்.9: 73-77)

(ஆ) வாடிய பூ Vatiya pu

(withered flower)

(11) அன்பின்மை, பொய்யான அன்பு,

போலித்தனம் - loveless, untrue

love, fake

'வாடிய பூவொடு வாரல் எம்

மனை ?' (கலி.75: 18)

(12) வீண் – waste, useless

'புது நலம் பூ வாடியற்று, தாம்

வீழ்வார் மதி மருள நீத்தக்கடை'

(கலி.147: 15-16)

(இ) சூடிக் கழித்த பூ Cutik kalitta

pu (used flower)

(13) பயனின்மை , வீண் – waste, futile

'கூடினர் புரிந்து குணன்

உணப்பட்டோர் சூடினர் இட்ட பூ

ஓரன்னர்' (கலி.23: 12-13)

(ஈ) செம் பூ Cem pu (good flower)

(14) இறைமை - devine

செம் பூத் தூஉய செதுக்குடை

முன்றில்' (பெரும்.338)

(உ) கோட்டுப் பூ Kottup pu (tree

flower)

(15) நட்பு - friendship


217