பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூ


'கோட்டுப்பூப் போல மலர்ந்துபின்

கூம்பாது வேட்டதே வேட்டதாம்

நட்பாட்சி' (நாலடி.215: 1-2)

(ஊ) கயப்பூ Kayappu (pond (water)

flower)

(16) பொருந்தா நட்பு - improper

friendship

'கயப்பூப் போல மலர்ந்து பின்

கூம்புவாரை நயப்பாரும் நட்பாரும்

இல்' (நாலடி.215:3-4)

(எ) மலர் Malar (blossom)


(17) நிலையாமை / அழிவு

unpermanent / destruction

'மல்லன் மூதூர் மலர்ப்பலி

உணீஇய' (நற்.73: 3)

நறுமணம் - fragrance

'பல் மலர் கஞலிய வெறி கமழ்

வேலி' (நற்.339: 10)

இன்பம் - pleasure

'மயங்கு மலர்க் கோதை குழைய

மகிழ்நன்' (குறு.393: 1)

வளமை - fertile

'வண் துறை நயவரும் வள மலர்ப்

பொய்கை ' (ஐங்.88: 1)

(18) வதுவை - marriage

'நல் மனை வதுவை அயர, இவள்

பின் இருங் கூந்தல் மலர்

அணிந்தோயே!' (ஐங். 294: 4-5)

(19) தண்மை - cool

'அதிர் பெயற்கு எதிரிய

சிதர்கொள் தண் மலர்'

(ஐங் 458; 2)

அழகு - beautiful

'புதல்மிசை நறு மலர் கவின்

பெறத் தொடரி' (ஐங்.463: 1)

மென்மை - soft|

'மாறு மென் மலரும், தாரும்

கோதையும்' (பரி.6: 46)

(20) தூய்மை - pure

'துரந்து புனல் தூவ, தூ மலர்க்

கண்கள்' (பரி.7: 52)

(21) கடவுளர் இருக்கை - devine

existence / sacred

'மலர்மிசை முதல்வனும். ... ... ...'

(பரி.8: 3)

(22) பெண்(மை), தலைவி - feminity,

heroine

பூ


'ஓர் இரா வைகலுள், தாமரைப்

பொய்கையுள் நீர் நீத்த மலர்

போல, நீ நீப்பின், வாழ்வாளோ?'

(கலி.5: 14-15)

(23) உள்ளம் - heart

'மலர்மிசை ஏகினான் மாணடி

சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்

வார்' (குறள்.3)

(24) காமம் - passion)

'காலை அரும்பி, பகல் எல்லாம்

போது ஆகி மாலை மலரும் இந்

நோய்' (குறள்.1227)

தூய்மை, மென்மை - pure, soft /

tender

'ஒப்புயர்வில் வேட்டோ

னொருநிலைப்பட் டாழ்ந்தசெயல்

நப்பின்னை ஞால மொருங்கறிக-

துப்பாராய்த் தூமலரின்

மென்மையுறு தோற்றத்தே

வைத்துய்க்க ஏமக் கிழத்தி யறிந்து'

(இன்னிலை.22)

(25) புண்ணியம் - merit -

'தையற் குறுவது தானறிந்தனள்

போல் புண்ணிய நறுமலர் ஆடை

போர்த்து ' (சிலப். 13: 171-172)

(26) விரிவு, பரப்பு - wide, expance

'வாடா வளத்தான் மலர்ஞால

மதிப்பின் மிக்க' (நீலகேசி.11: 1)

(ஏ) நீர்மலர் Nirmalar (water

flower)

உயர்வு - high

வெள்ளத்து அனைய மலர்நீட்டம்

- மாந்தர்தம் உள்ளத்து அனையது

உயர்வு' (குறள்.595)

(27) அளவு - measure

'இரவலர் தம்வரிசை யென்பார்

மடவார் கரவலராய்க் கைவண்மை

பூண்ட - புரவலர் சீர்வரைய

வாகுமாம் செய்கை

சிறந்தனைத்தும் நீர்வரைய வாநீர்

மலர்' (பழமொழி. 379)

(ஐ) நாறா மலர் Nara malar

flower without fragrance)

(28) பயனின்மை - incapacity, waste

'இணர் ஊழ்த்தும் நாறா

மலரனையர் கற்றது உணர

விரித்து உரையாதார்' (குறள். 650)

(29) துன்பம் - affliction


218