பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூ

'நறிய மலர் பெரிது நாறாமை

இன்னா ' (இன்னா .37: 1)

(ஓ) நாற்றம் இலாத மலர் அழகு

Narram ilata malar

(30) சிறப்பின்மை - not eminent

'நாற்றம் இலாத மலரின்

அழகின்னா ' (இன்னா .7)

(ஓ) பொன்மலர் Ponmalar (golden

flower)

சிறப்பு, அழகு - eminence, beauty

'இன்ப வியலோரார் யாணர்

விழைகாமம் பொன்னின்

அணிமலரிற் செவ்விதாம்'

'(இன்னிலை.25: 1-2)

(ஔ) மலர் கொடுத்தல் Malar

kotuttal (give flower)

(31) அன்பு - love

'கைவயிற் கொண்ட கழுநீர்

நறும்போது கொய்மலர்க் கண்ணி

கொடுப்போள் போலக் கனவில்

தோன்ற கண்படை இன்றி நனவில்

தோன்றிய நறுநுதல் சீறடி

மைவளர் கண்ணியை எய்தும்

வாயில் யாதுகொல் என்றுதன்

அகத்தே நினைஇ' (பெருங். மகத.7:

63-68)

(க) செப்பின் உள்ளே

வைக்கப்பட்ட மலர் Ceppin ulle

vaikkappatta malar (flower in box)

(32) வாடிய தன்மை - withering

'வகைவரிச் செப்பினுள் வைகிய

மலர்போல் தகைநலம் வாடி

மலர்வனம் புகூஉம்' (மணி.4: 65-

66)

(ங) செம்மலர் Cemimalar (good /

red flower)

(33) செழுமை, புனிதம் - floverish /

holy

'பலிகெழு செம்மலர் சார'

(திருஞான தேவா 499: 1)

(ச) பள்ளித்தாமம் (பூக்கள்)

Pallittamam

பூ


தூய்மை , நறுமணம் - pure, fragrant

'தூநறும் பள்ளித் தாமம் குஞ்சி

மேல் துதையக் கொண்டார்'

(பெரிய,3819:5)

(ஞ) பெய்யா மலர் (பழம்பூ)

Poyya malar

(34) பொலிவின்மை - not bright /

without radiance

'கார் தங்கி நின்ற கொடி

காளையைக் காண்டலோடு பீர்

தங்கி பெய்யா மலரில்

பிறிதாயினாளே' (சீவக. 1960; 3-4)

(ட) சின்னப் பூ Cinnap pu (totemic

flower)

(35) புகழ் - fame

'சின்னப்பூ அணிந்த குஞ்சிச்

சீதத்தன்' (சீவக.2251)

(ண) மலர்ச் சின்னம் (flower sign)

Malarc cinnam

புகழ் - fame

'வடிவாய வேலாற்கு மலர்ச்சின்னம்

சொரிவனபோல்' (சூளா. 171:3)

(ட) பூச்சூடாதிருத்தல் Puccutatiruttal

(not wearing|

flowers)

(36) பிரிவு, தனிமை - seperation,

loneliness

'சாமெனில் சாதல் நோதல்

தன்னவன் தணந்த காலைப்

பூமனும் புனைதலின்றிப்

பொற்புடன் புலம்ப வைகி'

(சீவக.1598: 1-2)

(ஒப்பு) Flower அழகு, அன்பு,

இசைவு, இயற்கை வளம்,

இளமை, ஒழுக்கம், கலவி, கற்பு,

கன்னித்தன்மை, காதல்,

குழந்தைப்பருவம், கொண்டாட்டம்,

சமநிலை, தகுதி, தன்னம்பிக்கை,

தூய்மை, நன்மை, நற்குணம்,

நீதித்தன்மை, பிறப்பு, பெண்பாற்

கருவாய், பொருத்தம், மகிழ்ச்சி,

மங்கலம், மறுபிறப்பு, வெற்றி;

அறியாமை, இறப்பு, நிலையாமை,


219