பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூ இதழ்


சிவப்பு மலர்கள் - அடங்காக்

கோபம், காதல், குருதி, வாழ்க்கை ,

வெறி உணர்ச்சி,

நீர்மலர்கள் - இயலாமை,

மறைக்குறிப்புப் பொருள்.

வெண் மலர்கள் - அறியாமை,

அன்பு, கடவுட்டன்மை, குற்றமற்ற

தன்மை, பேராண்மை, மெய்யுறு

புணர்ச்சி

பூ இதழ் Pu ital (petal)

(1) சிறுமை - mean

நெல்லுக்கு உமி உண்டு நீர்க்கு

நுரை உண்டு புல்லிதழ் பூவிற்கு

உண்டு ' (நாலடி.221)

பூண் Pin (ornament)

(1) அழகு - beaauty

'நுண் பூண், மடந்தையைத்

தந்தோய் போல' (குறு.147: 3)

(2) சிறப்பு - eminence

'பூண் வளைந்தன்ன பொலஞ்

சூட்டு நேமி' (குறு.227: 1)

(3) உடைமை, உரிமை - possession,

wright

'மருப்புப் பூண் கையுறையாக

அணிந்து ' (கலி.82: 12)

(4) உயர்வு - lofty

'மை அற விளங்கிய ஆன் ஏற்று

அவிர் பூண்' (கலி.85:11)

(5) ஆளுமை -ruling! dominent

'விளங்கு மணிக் கொடும் பூன்

ஆஅய்!' (புறம்.130: 1)

பூத்தல் Puttal (bloom)

(1) நுகர்தல் - receive / enjoy/ consume

'பல்பழ மணிக்கொம் பீன்று

பரிசில் வண்டுண்ணப் பூத்து'

(சீவக.2728: 2)

பூப்பரிதல் Pipparital (remove flowers)

(1) பிரிவு, தனிமை - seperation,

lonliness

'பூப்பரிவார் பொன்செய்

கலம்பரிவார்' (சீவக.2965: 1)

பூ மழை Pi malai (flower rain)

(1) வாழ்த்து - blessing, praise


பூரண கும்பம்


'புனித மா தவர் ஆசியின் பூ

மழை பொழிந்தார்'

(கம்ப.பால.454: 1) |

(2) மகிழ்ச்சி , ஆசி - joy, blessings

'தண்ணளி வெண்குடை வேந்தன்

செயல்கண்டு தரியாது

மண்ணவர்கண் மழை பொழிந்தார்

வானவர் பூ மழை சொரிந்தார்'

(பெரிய.130: 1-4)

(3) சிறப்பு - eminence, honour

'தேவரும் முனிவர் தாமும்

சிறப்பொடு பொழியும் தெய்வப்

பூவின் மாமழையின் மீள

மூழ்குவார் போன்று தோன்ற'

(பெரிய,398: 5-8)

(ஆ) பொன் மாரி மலர்மழை

Pon mari malar malai (shower of gold

and flowers)

வாழ்த்து , மகிழ்ச்சி - blessing, joy /

cheer

'மண்ணெலாம் பைம்பொன் மாரி

மலர்மழை சொரிந்து வாழ்த்தி'

(சீவக.3085:2)

பூ மாலை தீயிடைப்படல் Pu malai

tiyitappatal (flower

garland in fire)

(1) அழிவு, துன்பம் - destruction,

misery

'நீல வல்விடம் தொடர்ந்தெழ

நேரிழை மென்பூ மாலை

தீயிடைப் பட்டது போன்றுளம்

மயங்கி' (பெரிய.28: 1058)

பூரண குடத்து நீர் நறவின்

பொங்குதல் Purana kutathu nir

naravin ponkutal (water of full pot

swelling as toddy)

(1) தீமை, அழிவு, இறப்பு - evil,

destruction, death -

'ஆரண மந்திரத்து அறிஞர்

நாட்டிய பூரண குடத்து நீர்

நறவின் பொங்குமால்'

(கம்ப.சுந்.374: 3-4)

பூரண கும்பம் Pitana kumpam (full pot)

(1) மங்கலம் - anspicious


220