பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூரண பொற்குடம் வைத்தல்


'பூரண கும்பமும் பொலம்

பாலிகைகளும் பாவை விளக்கும்

பலவுடன் பரப்புமின்' (மணி.1: 44-

45)

பூரண பொற்குடம் வைத்தல் Purana

porkutam vaittal (keeping full

gold pot)

(1) மங்கலம் - anspicious

'பூரண பொற்குடம் பொலிய

வைக்கவே' (சூளா.902: 4)

பூரண பொற்குடம் வைத்துப் புறம்

எங்கும் தோரணம் நாட்டல் Purana

porkutam vaittup puram enkum toranam

nattal (keeping full gold pot and hoisting

hangings all around)

(1) திருமணம் - wedding

'பூரண பொற்குடம் வைத்துப் புறம்

எங்கும் தோரணம் நாட்டக் கனாக்

கண்டேன்' (நாலா.556: 3-4)

பூரண மங்கல கலசங்கள் வெடித்தல்

Purana mankala kalacankal vetittal

(full auspicious pots to break)

(1) தீமை, அழிவு - evil omen

'.. .. .. வெடித்தன பூரண மங்கல

கலசங்கள்' (கம்ப.சுந்.298: 7-8)


பூல் Pul (say ‘phoo')

(1) சிறுமை - mean

'எமரிது செய்க எமக்கென்று

வேந்தன் தமரைத் தலைவைத்த

காலைத் - தமரவற்கு வேலின்வா

யாயினும் வீழார்

மறுத்துரைப்பின் ஆலென்னிற்

பூலென்னு மாறு' (பழமொழி. 268)

பூவல் குன்றம் (செம்மண் மலை) Puval

kunram (red hill)

(1) சிவப்பு நிறம் - red

'ஓவாக் கணைபாய ஒல்கி

எழில்வேழம் தீவாய்க் குருதி

இழிதலால் செந்தலைப் பூவல்அம்

குன்றம் புயற்கு போன்றவே'

(களவழி.12:1-3)


பெண் யானைகள் மதம் சொறிதல்


பூவை (நாகணவாய்ப் பறவை) Puvai (a

bird)

(1) பேசும் ஆற்றல் - speech capacity

'பூவையும் கிளியும் மிழற்றப்

புகுந்து' (சீவக.873: 3)

(2) பகுத்தறிவு - reasoning/ rational

'பொற்றொடி தத்தையீரே

பொத்தும் நும் வாயை என்றே

கற்பித்தார் பூவையார் தம் காரணக்

கிளவி தம்மால்' (சீவக. 2511:3-4)

பூவைப்பூ Pivaippu (a flower)

(1) கருமை - black

'பூவைப்பூ வண்ணன் அடி' (திரி.1:

4)

பூளை வீ Pulai vi (a flower)

(1) மென்மை - softness

பொங்கு கோபம் சுட பூளை வீ

அன்ன தன் அங்கம் வெந்து அன்று

தொட்டு அனங்கன் ஆயினான்'

(கம்ப.பால.340: 3-4)

(2) நொய்ம்மை , அழிவு - fragile

destroyed

தேறுதி நாளையே அவ் இருபது

திண் தோள் வாடை வீறிய

பொழுது பூளைவீ என வீவன்

அன்றே ' (கம்ப.ஆரண்.861: 4)

(3) வெண்மை நிறம் - white

'பூளை வீ புரை பனிப் புயற்குத்

தேம்பிய' (கம்ப.பால.531: 2)

(ஆ) மாருதம் அறைந்த பூளை

Marutam arainta pulai (poolai flower in

strom)

அழிவு - destruction

‘ஆள் ஐயா உனக்கு அமைந்தன

மாருதம் அறைந்த பூளை ஆயின

கண்டனை ' (கம்ப .யுத்.1212: 1-2)

பெண் யானைகள் மதம் சொரிதல்

Pen yanaikal matam corital

(rutting of she elephent)

(1) தீமை, இறப்பு, அழிவு - evil

omen

'பிடி எலாம் மதம் பெய்திட ........'

(கம்ப.ஆரண்.431:1)

221