பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெண்கள் தோள் இடம் துடித்தல்


பெண்கள் தோள் இடம் துடித்தல்

Penkal tol itam tutittal (left

shoulder of women quiver)

(1) நன்மை , வெற்றி - good omen,

victory

... ... .. நெடுங்கண் ஏழையர்

தோளுமங்கு இடவயிற் துடித்த'

(சூளா .1218: 2-3) |

பெண்களுக்குக் புருவம், கண், நுதல்

இடம் துடித்தல் Penkalukku puruvam,

kan, nutal itam tutittal (quivering of left

eye, eye brow and forehead of women)

(1) நன்மை - good omen

'நலம் துடிக்கின்றதோ நான் செய்

தீவினைச் சலம் துடித்த

இன்னமும் தருவது உண்மையோ

பொலந்துடி இருங்குலாய் புருவம்

கண் நுதல் வலம் துடிக்கின்றல

வருவது ஓர்கிலேன்' (கமப்.சுந்.360)

பெண்களுக்குக் கண், புருவம், தோள்

வலம் துடித்தல் Penkalukkuk kan,

puruvam, tol valam tutittal (quivering of

right eye, eye brow, shoulder of women)

(1) தீமை , அழிவு - evil omen

'நிருதர்தம் குல மாதர் பொலந்

துடிக்கு அமை மருங்குல் போல்

கண்களும் புருவமும் பொன்

தோளும் வலம் துடித்தன'

(கம்ப.சுந்.298: 2-5)

(ஆ) மகளிர் வலக்கண்கள்

துடித்தல் Makalir valakkankal tutittal

(quivering of right eyes of women)

(2) இறப்பு, தீமை, அழிவு - evil

omen

'போக மகளிர் வலக் கண்கள்

துடித்த பொல்லாக் கனாக்

கண்டார் ஆக மன்னற்கு ஒளி

மழுங்கிற்று' (சீவக.2173: 1-3)

பெரியோர்க்கு உதவிய சிறு உதவி

Periyorkku utaviya ciru utavi (small

help to great persons)

(1) பெருக்கம் - increase, abundance


பேய்ச்சுரைக்காய்


'பெரியோர்க்கு உதவிய சிறு

நன்றேய்ப்பக் கரவாது பெருகிக்

கையிகந்து விளங்கும் உள்ளத்து

உவகை தெள்ளிதின் அடக்கி'

(பெருங்.உஞ்.44: 138-140)

பெருநீர் அற சிறுமீன் - துவளுதல்

Perunir ara cirumin tuvalutal

(small fish squirm without

water)

(1) தவிப்பு, பிரிவு, துன்பம் -

perplexity, seperation, affliction

'பெருநீர் அற சிறுமீன் துவண்டு

ஆங்கு நினைப் பிரிந்த

வெருநீர்மையேனை விடுதி

கண்டாய்' (திருவா.6: 26: 1-3)

பேகன் Pekan (a benevolent chief)

(1) வண்மை - benevolent

'வண்டு படு நறவின் வண் மகிழ்ப்

பேகன்' (அகம்.262: 16)

(2) ஈகை - bounty, giving

'உடாஅ போரா வாகுதல்

அறிந்தும் படாஅம் மஞ்ஞைக்கு

ஈத்த எங்கோ ' (புறம்.141: 10-11)

(3) புகழ் - fame

'... .. .. .. வயங்கு புகழ்ப் பேகன்'

(புறம்.144: 12)

பேடி Peti (ennuch)

(1) துன்பம் - affliction

'பேடி வேதனை பெரிதோடி

ஊருமாதலால்' (நீலகேசி.96: 1-2)

பேய் Péy (ghost)

(1) துன்பம் - affliction

"பெரும் புண்ணுறுநர்க்குப் பேஎய்

போல' (நற்.349: 8)

(2) அச்சம் - fear

'அணங்கரு மரபிற் பேஎய் போல

விளர்ஊன் தின்ற வேட்கை நீங்க'

(அகம்.265: 14-15)

பேய்ச்சுரைக்காய் Peyccuraikkay (bitter

bottle gound)

(1) கசப்பு, அடக்கமின்மை - bitter,

immodest

222