பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொலம்பாலிகை metable


'மாண்டவன்றே ஆண்டுகள்

துணையே வைத்ததன்றே

வெறுக்கை ' (புறம்.357: 4-5)

(இ) செல்வம் Celvam

நிலையாமை - unstable

'அன்னோர் செல்வமும் மன்னி

நில்லாது' (புறம்.360: 11)

பொலம்பாலிகை Polampalikai (golden

sprouting grains)

(1) மங்கலம், நன்மை , வளம் -

auspicious, good, fertile

'பூரண கும்பமும் பொலம்

பாலிகைகளும் பாவை விளக்கும்

பலவுடன் பரப்புமின்' (மணி.1: 44-

45)

பொழில் Polil (grove | orchard)

(1) வளமை, தண்மை - fertile, cool

'புன்னை பொரிமலரும் பூந்தண்

பொழிலெல்லாம் செங்கண்

குயிலகவும் போழ்து கண்டும்

(திணை .ஐம்.14:1-2)

(2) அழகு - beauty

'காமரு பொழில் இடைக் காவல்

வைத்துமே' (சூளா. 116: 4)

பொற்றாலி (ஐம்படைத்தாலி) Porrali

(gold necklace (five weapon))

(1) செல்வச்சிறப்பு, மேன்மை/ உயர்வு

- wealthy, eminent / lofty

'வல்வருங் காணாய் வயங்கி

முருக்கெல்லாஞ் செல்வர்

சிறார்க்குப்பொற் கொல்லர்போ-

னல்ல பவளக் கொழுந்தின்மேற்

பொற்றாலி பாஅய்த் திகழக்கான்

றிட்டன தேர்ந்து)

(திணைமாலை,66)

பொறி Pori (trap)

(1) ஆபத்து - danger

'எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்

எருத்தின் செய்யும் மேவல் சிறுகட்

பன்றி ஓங்கு மலை வியன் புனம்

படீஇயர், வீங்கு பொறி நூழை

நுழையும் பொழுதில், தாழாது


பொன்


பாங்கர்ப் பக்கத்துப் பல்லி

பட்டென' (நற்.98: 1-5)

(2) அழிவு, 'இறப்பு - destruction,

death

'தினை உண் கேழல் இரிய,

புனவன் சிறு பொறி மாட்டிய

பெருங் கல் படாஅர். :ஒண் கேழ்

வயப் புலி படூஉம். -- நாடன்'

(நற்.119: 1-3)

பொறி Pori (switch) (mechanical device)

(1) இயக்கம் - function

'பொறி அழி பாவையின் கலங்கி'

(நற்.308: 7)

பொறையன் (சிபி) Poraiyan (a king)

(1) அருள் - mercy, compassion

'குறைவின் மிக நிறை தையுழி

மறை அமரர் நிறையருள

முறையொடு வரும் புறவன் எதிர்

நிறைநிலவு பொறையன் உடல்

பெற அருளும் புறவம் அதுவே'

(திருஞான.தேவா.589: 5-8)

பொன் Pon (gold)

(1) உயர்வு - lofty

'நன் பொன் இமைக்கும்

நாடனொடு அன்புறு காமம்

அமைக நம் தொடர்பே'

(நற்.389: 10-11)

(2) வளமை | செழிப்பு - luxuriant

'பொன்மலி பாடலி' (குறு.75: 4)

(3) அழகு | ஒளி - beauty /

brightness ,

'பொன் ஏர் மேனி நல் நலம்

சிதைத்தோர்' (குறு.319: 6)

(4) சிறப்பு - special

'நெல் பல பொலிக! பொன்

பெரிது சிறக்க!' (ஐங்.1: 2)

(5) தலைமை - leading/ headship

'பொன் நிறம் விரியும் பூக்கெழு

துறைவனை' (ஐங். 110: 2)

(6) அருமை - rare, worthy

'பொன்போல் புதல்வனோடு என்

நீத்தோனே' (ஐங்.265: 4)

(7) பழியின்மை - blemishless

'பொன் உரை மணி அன்ன,

மாமைக்கண் பழி உண்டோ '

(கலி.48: 17)

224