பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போந்தை

பேரளவு - large, huge -

'தினைத்துணையர் ஆகித்தம்

தேசுள்ளடக்கிப் பனைத்துணையார்

வைகலும் பாடழிந்து வாழ்வர்'

(நாலடி.105: 1-2)

(9) நீட்சி - long

'பனையின் நீள் கரம் பற்றிய

கையினாள்' (கம்ப. அயோ .514: 4)

(10) நெடுமை tall

'பனைவளர் கம்மாப் படாத்தம்

பலத்தரன் பாதம் விண்ணோர்'

(திருக்கோ .14: 154: 1)

(ஈ) பனம்பழம் Panampalam (palm

fruit)

(11) பயன் | வளன் - use / fertility

'உவப்ப உடன்படுத்தற் கேய கருமம்

அவற்றவற் றாந்துணைய வாகிப்

பயத்தால் வினைமுதிரின்

செய்தான்மே லேறும்

பனைமுதிரின் தாய்தாள் மேல்

வீழ்ந்து விடும்' (பழமொழி. 270)

(உ) படுபனை - Patupanai

(12) பயன், ஈகை - use, bounty

'நடுவூருள் வேதிகை சுற்றுக்கோல்

புக்க படுபனை அன்னர் பலர் நச்ச

வாழ்வார்' (நாலடி.96: 1-2)

(ஊ) ஏற்றைப் பனை Erap panai

(13) வீண் / பயனின்மை – waste /

not beneficial

'குடிகொழுத்தக் கண்ணும்

கொடுத்துண்ணா மாக்கள்

இடுகாட்டுள் ஏற்றைப் பனை'

(நாலடி.96: 3-4)

(எ) பச்சோலை Paccolai (fresh

palm leaf)

(14) அறிவுடையார், கற்றறிந்தார் -

learned, wise

'கற்றறிந்த நாவினார்

சொல்லார்தம் சோர்வஞ்சி

மற்றைய ராவார் . பகர்வர்

பனையின்மேல் வற்றிய ஓலை

கலகலக்கும் எஞ்ஞான்றும்

பச்சோலைக்கு இல்லை ஒலி'

(நாலடி.256)


போர்வை


(ஏ) வற்றிய பனை ஓலை

Variya panai blai (dry palm leaf)

(15) ஒலி, அறிவிலார் - sound, agnorant

/ illiterate

'கற்றறிந்த நாவினார் சொல்லார்தம்

சோர்வஞ்சி மற்றைய ராவார்

பகர்வர் பனையின் மேல் வற்றிய

ஓலை கலகலக்கும் எஞ்ஞான்றும்

பச்சோலைக்கு இல்லை ஒலி'

(நாலடி.256)

(ஐ) பெண்ணை Penmai

(16) நட்பு, உயர்வு, முதன்மை , பழமை

- friendship, lofty, foremost, ancient

'கடையாயார் நட்பிற் கமுகு

அனையர்; ஏனை இடையாயார்

தெங்கின் அனையர் தலையாயார்

எண்ணரும் பெண்ணைபோன்

றிட்டஞான் றிட்டதே, தொன்மை

உடையார் தொடர்பு' (நாலடி.216)

(ஒ) குறைப்பனை Kuraippanai (short

| dwarf palm)

(17) பயனின்மை, இயக்கமின்மை -

futile, functionless - -

'கூப்பிடு குரலாய் நிற்பர் -

குறைப்பனைக் குழாங்கள் ஒத்தே'

(சீவக.2772: 4)

(ஒப்பு) Palm Tree அரச தகுதி,

அறிவு, அன்பு, ஆர்வமிகுதி,

உயர்வு, உயர் குணமுடைமை,

கன்னிமை, தூய்மை , நட்பு,

நிலைபேறு, நிறைவளம், நீதி,

பிள்ளைப்பேறு நிலை, மறுபிறப்பு,

வாழ்வு, விளைவளம், வெற்றி.

போர்த்தல் Porttal (cover)

(1) அறியாமை - ignorance

போலுமென் றோர்தல் செல்லாய் .

போர்த்தனை அகமு மென்றாள்'

(நீலகேசி.435: 4)

போர்வை Porvai (cover)

(1) பொய் - lie

'சடங்கொள் சீவரப் போர்வை'

(திருஞான. தேவா.2533: 1)

227