பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மடலேறுதல்


அவனோடும் உடன் சென்று அங்கு

ஆனை மேல் மஞ்சனம் ஆட்டக்

கனாக் கண்டேன்' (நாலா.565)

மடலேறுதல் Mataltrutal (ride the palm

horse)

(1) காமம் - passion/ love excess

மடலே, காமம் தந்தது; அலரே,

மிடை பூ எருக்கின் அலர்

தந்தன்றே ' (நற்.152: 1-2)

(2) இகழ்ச்சி, நாணின்மை - disgrace /

bashless

‘விழுத்தலைப் பெண்ணை

விளையல் மாமடல் மணி அணி

பெருந்தார் மரபிற் பூட்டி, வெள்

என்பு அணிந்து, பிறர் எள்ளத்

தோன்றி, ஒருநாள் மருங்கில்

பெருநாண் நீங்கி' (குறு.182: 1-4)

மண் Man (soil, mud / land)

(1) நெகிழ்ச்சி - tenderness

‘மண் போல் நெகிழ்ந்து' -

(அகம்.26: 25)

(2) அரசு - kingdom

'.. .. .. .. ஓங்கு புகழ் மண் ஆள்

செல்வம் எய்திய' (புறம்.47: 9-10)

(3) பிணித்தல் - bind |

'குன்று தலைமணந்த மலை

பிணித்து யாத்த மண்'

(புறம்.357: 1)

(4) உறுதி - firm

'மண்ணோடு இயைந்த

மரத்தனையர் கண்ணோடு

இயைந்துகண் ணோடா தவர்'

(குறள்.576)

(ஆ) மண் வௌவுதல் Man

vauvutal (capture land)

(5) வெற்றி - victory

'பாய் இருட் பரப்பினைப் பகல்

களைந்தது போல, போய் அவர்

மண் வௌவி வந்தனர் சேய் உறை

செய் வினை முடித்தே'

(கலி.148: 22-24)

(இ) மண் நோக்குதல் Man

nokkutal (look at land)

(6) கவர்தல் - captivate


மணல்


'மாற்று இரு வேந்தர் மண்

நோக்கினையே' (புறம்.42: 24)

(ஈ) மண் நாணுதல் Man nanutal

(land feeling shy)

(7) சுருக்கம், சிறுமை - reduce,

degrade

'மண் நாணப் புகழ் பரப்பியும்'

(புறம்.166: 23)

மண்டை Mantai (bowl)

(1) இரத்தல் - beg

'வழிக்கு மாறும்தம் மண்டையின்

உண்டுமன்' (நீலகேசி.238: 1)

மண் மாரி Man mari (sand rain)

(1) அழிவு - destruction

'செய்யாத செய்த திருமலைராயன்

வரையில் அய்யா அரனே அரை

நொடியில் வெய்ய தழல்

கண்மாரியால் மதனைக்

கட்டழித்தாற் போல் தீயோர்

மண்மாரியால் அழிய வாட்டு'

(தனிப் 364)

மணல் Manal (sand)

(1) நுண்மை - minute

'நுண் மணல் அறல் வார்ந்தன்ன'

(குறு.116: 3)

(2) திண்மை - firm/ strong

'உரவுத் திரை பொருத

திணிமணல் அடைகரை'

(குறு.175: 2)

(3) தகுதி / சிறப்பு - capability /

eminence

'வையைக்குத் தக்க மணல் சீர் சூள்

கூறல்!' (பரி.8: 71))

(4) மிகுதி - abundance / multitude

'கரை பொருது இரங்கும், கனை

இரு முந்நீர்த் திரை இடு

மணலினும் பலரே' (மது.235-236)

(ஒப்பு) Sand எண்ணிக்கையற்ற

நிலை, ஏற்கும் இயல்புடைய

தன்மை, துன்பம் தாங்கும்

ஆற்றல், நம்பிக்கை, பாதுகாப்பு;

நிலையற்ற தன்மை, பயனற்ற

உழைப்பு.


229