பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/260

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணமகளிர் கோலம்

மணமகளிர் கோலம் Manamakalir

kolam (bridal attaire)

(1) அழகு / வனப்பு - beautiful

'மைத்தடங்கண் மணமகளிர்

கோலம்போல் வனப்பெய்தி'

(சிலப்.7: 2)

மணர்சுவர் Manarcuvar (mud wal)

(1) அழிவு - destruction

'பொத்தல் மணர்சுவர்ப் பொல்லாக்

குரம்பையை' (திருநா.தேவா. 1950:

1)

மணி (இரத்தினம்) Mani (gem/ crystal)

(1) தூய்மை – pure / clear

'மை அற விளங்கிய மணி நிற

விசும்பில்' (நற்.231: 1)

(2) நிகரற்ற தன்மை , உயர்வு -

incomparable, lofty

'நீறு ஆர்ந்தும் ஓட்டா நிகரில்

மணியேபோல் வேறாகத்

தோன்றும் விளக்கம் உடைத்தாகித்

தாறாப் படினும் தலைமகன்

தன்னொளி நூறா யிரவர்க்கு நேர்'

(பழமொழி. 69)

(3) பெருமை - greatness / grand

'மாசு படினும் மணிதன்சீர்

குன்றாதாம்' (நான். 100: 1)

(4) வளமை - luxuriant

'குளநெல் முன்றிற்கனி தேன்சொரி

சோலைக் குளிர்மணி வளமை

மல்கி எரி யம்மட மந்திகை

காய்த்துவான்' (சீவக.2491: 1-2)

(ஆ) மாமணி Mamani

(5) பெறற்கருமை - rare / hard to

achieve

'ஆங்கவள் உரைகேட்டு

அரும்பெறன் மாமணி ஓங்குதிரைப்

பெருங்கடல் வீழ்த்தோர் போன்று'

(மணி.2: 72-73)

மணிச் சிரல் (மீன் கொத்தி) Manic ciral

(king fisher)

(1) குறிக்கோள் - aim/ target

'புலவுக் கயல் எறிந்த பொன் வாய்

மணிச் சிறல்' (சிறுபா.181)


மதுரை


(2) மயக்கம் - confusion

'இரை தேர் மணிச் சிரல் இரை

செத்து எறிந்தென' (பெரும்.313)

மணிபல்லவம் Manipallavam (an island)

(1) நன்மை | சிறப்பு - goodness /

eminence

'வஞ்சமில் - மணிபல்லவத்திடை

வைத்தேன்' (மணி.7: 22)

மத்தம் Mattam (churning rod)

(1) இயக்கம் - function

'பாசம் தின்ற தே கால் மத்தம் நெய்

தெரி இயக்கம் வெளில்முதல்

முழங்கும்' (நற்.12: 2-3)

(2) சுழற்சி - rotation/ whirl

'மத்தம் பிணித்த கயிறு போல், நின்

நலம் சுற்றிச் சுழலும் என் நெஞ்சு'

(கலி.110: 10-11)

(3) பயன் - utility

'தீம் தயிர் கடைந்த திரள் கால்

மத்தம்' (அகம்.87:1)

மத்தம் (ஊமத்தம்) Mattam (a plant)

(1) தூய்மை - pure

'சுரும்பமர் கொன்றையும் தூய

மத்தமும்' (திருஞான தேவா 402: 3)

மத்தளம் முழங்குதல் Mattalam

mulankutal (rumbling of drum)

(1) திருமணம் - wedding

'மத்தளம் கொட்ட வரி சங்கம்

நின்று ஊத .. .. .. கனாக்

கண்டேன்' (நாலா.561)

மதியம் கெடுத்த வயமீன் -Matuyam

ketutta vayamin

(1) பொலிவின்மை - dull, not radiant

'மதியம் கெடுத்த வயமீன் எனத்

தம்பி மாழாந் துதியற் குரியாள்'

(சீவக.பதி.23: 1-2)

மதுரை Maturai (a city)

(1) புகழ் - fame

'தண் தமிழ் வேலித் தமிழ்நாட்டகம்

எல்லாம் நின்று நிலை இப் புகழ்


230