பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயில்


கோடு உயர் குன்றின்மேல் ஆலும்

மாமழை நீண்முகில் ஆர்த்தொறு

மாலும் - மாமயில் ஆலுமொர்

பாலெலாம்' (சூளா.21)

(10) ஒழுக்கம் - conduct / behaviour

'துயிலும் பொழுதத்

துடைவூண்மேற் கொண்டு

வெயில்விரி போழ்தின்

வெளிப்பட்டா ராகி

அயில்போலுங் கண்ணாய்!

அடைந்தார்போல் காட்டி

மயில்போலுங் கள்வ ருடைத்து'

(பழமொழி, 194)

(11) அறியாமை | மடமை - foolish/

ignorant

'முன்னை யுடையது காவா

திகழ்ந்திருந்து பின்னையா

தாராய்ந்து கொள்குறுதல்

இன்னியல் மைத்தட்ங்கண்

மாதராய்! அஃதாதல்

வெண்ணெய்மேல் வைத்து

மயில்கொள்ளு மாறு'

(பழமொழி. 210)

(ஆ) தோகை (மயில்) Tokai

அழகு - beauty, charming

'கமழ் தாது ஆடிய கவின் பெற

தோகை' (நற். 396:5)

(12) மாட்சி - noble / honourable

'தோகை மாட்சிய மடந்தை'

(ஐங். 293:4)

வளமை - luxuriant

'பாகல் ஆர்கைப் பறைக் கட்பீலித்

தோகைக் காவின் துருநாட்டு

அன்ன ' (அகம். 15:4-5)

(இ) பிணிமுகம் Pinimukam

(13) தெய்வத்தன்மை, கொள்கை

divine, principle

'பிணிமுக ஊர்தி ஒண்செய்

யோனும்' (புறம். 56:8)

(ஈ) மஞ்ஞை Mannai

மடமை - ignorance

'கலவம் விரித்த மட மஞ்ஞை '

(பொரு.212)

தலைவி -heroine

பீலி மஞ்ஞை பெடையோடு

ஆலும் குன்ற நாடன் பிரிவின்

சென்று ' (நற்.288: 3-4)

(15) பெண் - femionity / woman


மயில்


அணி கிளர் கலாவம் ஐது

விரித்து இயலும் மணி புரை

எருத்தின் மஞ்ஞை போல, நின்

வீ பெய் கூந்தல் வீசு வளி உளர

ஏகுதி - மடந்தை !' (நற்.264: 3-6)

(உ) மஞ்ஞை ஆலல் Mannai alal

(dancing peafowl)

(15) மழை வரவு - rains

.. .. .. .. மஞ்ஞை மா இனம்

காலமாரி பெய்தென, அதன் எதிர்

ஆலலும் ஆலின' (குறு.251: 1-3)

(ஊ) ஏவுறு மஞ்ஞை Evuru

mannai (peafowl hit by arrow)

(16) துன்பம் - affliction -

'ஏவுறு மஞ்ஞையின் இனைந்தடி

வருந்த' (மணி.7: 127)

(எ) மயில் வலப்பக்கம் செல்லுதல்

valappakkam cellutal

(17) நன்மை - good omen

'ஏகும் அளவையின் வந்தன

வலமும் மயில் இடமும் காகம்

முதலிய முந்திய தடை செய்வன

கண்டான்' (கம்ப.பால. 1213: 1-2)

(ஏ) வலையொழி மஞ்ஞை

Valaiyoli mannai

(18) துயர் நீங்குதல் - devoid of

perplexity

'வலையொழி மஞ்ஞையின்

மனமயக்கு ஒழிதலும்' (மணி.21:

189)

(ஒப்பு) Peacock அரசமை, அழகு

இலையுதிர்காலம், உலகத்தின்

உயர்வு, உயிர்ப்பித்தல், எச்சரிக்கை,

ஒழுக்கம், கற்பு, கார்காலம்,

கொள்கை, சிறப்பு, சிறந்த பண்பு,

செல்வம், செழுமை, தீமையை

அழிக்கும் செயல்,

தெய்வீகத்தன்மை, தொடக்கம்,

நிலைபேறு, நேர்மை, மறுமலர்ச்சி,

மழைவரவு, மீட்பு, மேன்மை,

முழுமை, வளமை, வழிபாடு,

விடியல், விழிப்பு.

227