பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மரகதம்


மரகதம் Marakatam (emerald)

(1) பச்சை நிறம் - green

'காசு அறு பவளச் செங்காய்

மரகதக் கமுகு பூண்ட '

(கம்ப. பால.494:3)

மரகதப் பொருப்பு Marakatap poruppu

(green mountain)

(1) நிறைவு, கடவுட்டன்மை - totality,

devine

'நஞ்சு இவரும் மிடற்று அரவுக்கு

அமிர்து நனி கொடுத்து ஆயைக்

கலுழன் நல்கும் எஞ்சு இல்

மரகதப் பொருப்பை இறைஞ்சி

அதன் புறம் சார ஏகி மாதோ'

(கம்ப. கிட்,762: 5-8)

மரம் Maram (tree)

(1) வளமை - fertile / abundant

'குருதி வேட்கை உரு கெழு வய

மான் வலி மிகு முன்பின் மழ

களிறு பார்க்கும். மரம் பயில்

சோலை மலிய' (நற். 192: 1-3)

(2) பயன் - benefit

மரம் சா மருந்தும் கொள்ளார்.

மாந்தர்' (நற்.226: 1)

(3) உறுதி - firm

'நாள் இடைப் படாஅ நளிநீர்

நீத்தத்து இடிகரைப் பெரு மரம்

போல, தீது இல் நிலைமை

முயங்குகம் பலவே' (குறு.368: 6-8)

(4) செல்வம் | செழிப்பு - wealth /

luxuriant

'ஈதலில் குறை காட்டாது அறன்

அறிந்து ஒழுகிய தீதிலான்

செல்வம் போல், தீம் கரை மரம்

நந்த'

(கலி.27: 1-2)

(5) நாணின்மை - bashless

'ஊரோர் எடுத்த அம்பல் அம்

சினை, ஆராக் காதல் அவிர் தளிர்

பரப்பி, புலவர் புகழ்ந்த நார் இல்

பெரு மரம் நில வரை எல்லாம்

நிழற்றி, அலர் அரும்பு

ஊழ்ப்பவும், வாராதோரே'

(அகம்.273: 13-17)

(6) நன்மை - goodness

மரம்


'போது விரி பல் மரனுள்ளும்

சிறந்த காதல் நல் மரம் நீ;

நிழற்றிசினே !' (புறம்.272: 2-3)

(7) வருத்தம் - suffer

'விலங்கிடு பெரு மரம் போல,

உலந்தன்றுகொல், அவன் மலைந்த

மாவே?' (புறம்.273: 6-7)

(8) துன்பம் - affliction -

'மரம் படு சிறு தீப் போல.

அணங்கு ஆயினள், தான் பிறந்த

ஊர்க்கே ' (புறம்.349: 6-7)

(9) பண்பின்மை - unrefined / indecent

'அரம் போலும் கூர்மையரேனும்

மரம் போல்வர் மக்கட் பண்பு

இல்லாதவர்' (குறள் 997)

(10) ஊக்கமின்மை - unmotivated

'உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை

அஃது இல்லார் மரம் மக்கள்

ஆதலே வேறு' (குறள்.600)

(11) வலிமை - strong

‘மரம்போல் வலிய மனத்தாரை'

(பழமொழி.224: 1)

(12) மகவின்மை - childless

'மக்களை இலாதவர் மரத்தொடு

ஒப்ப' (சூளா.418: 1)

(13) வேட்கை - wish, desire

'மாட்சி நீரின் மாண்சினை

பல்கிய வேட்கை என்னும்

விழுத்தகு பெருமரம் புணர்ச்சிப்

பல்பூ இணர்த்தொகை ஈன்று

நோயி லின்பக் காய் பல

தூங்கியாழ வற்புக்கனி யூழறிந்

தேந்த' (பெருங்.வத்.9: 73-77)

(ஆ) பழுமரம் Palumaram (fruit

tree)

(14) செல்வம்/ செழிப்பு/ கொடை

பயன்/ நன்மை - wealth / bounty /

benefit / luxuriant

'தா அவல் அஞ்சிறை நொப்பறை

வாவல் பழுமரம் படரும் பையுள்

மாலை ' (குறு.172: 1-2)

(இ) வாடிய மரம் Vatiya maram

(withered tree)

(15) வறுமை - poverty

'வறியவன் இளமை போல் வாடிய

சினையவாய்' (கலி.10: 1)

துன்பம் - affliction -


233