பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மராஅம்


பொத்தின்றிக் காழ்த்த மரம்'

(திரி.75) .

(க) தாள் (அடிமரம்) Tal (stem)

(24) தலைவன் - hero

'தலைமகன் தாள் தனக்காகச்

சாகைய நிலைமைகொண்

மனைவியா நிமிர்ந்த பூந்துணர்

நலமிகு மக்களா முதியர்

தேன்களாக் குலமிகு கற்பகம்

குளிர்ந்து தோன்றுமே' (சூளா.414)

(ங) வன்மரம் Vanmaram (strong

tree)

(25) பாலை - dry land

'வாகையும் பிறவும் வன்மரம்

ஒடுங்கி' (பெருங். உஞ்.52; 44)

(ஒப்பு) Tree அரசநிலை, அழகு,

அறிவாற்றல், ஆரோக்கியம்,

இருபால் தன்மை , இறப்பின்

வெற்றி, உறுப்புகளின் இணைவு,

சிறந்த தன்மை, தண்டனை,

தியாகம், நிலைபேறு, நிலையான

மறுபிறப்பு, நிலையான

மெய்ப்பொருள், நீண்ட வாழ்நாள்,

நீதி, புகலிடம், மகிழ்ச்சி , மனித

இயல்பு, மீட்பு, மேன்மை,

வாழ்க்கை

மராஅம் Maraam (a tree)

(1) கடவுட்டன்மை - godhood / devine

existance

'மன்ற மராஅத்த பேஎமுதிர்

கடவுள்' (குறு.87: 1)

(ஆ) மரவம் Maravam

(2) உறுதி / ஆற்றல் / வலிமை -

firm / strength / power

'மள்ளர் அன்ன மரவம் தழி இ.

மகளிர் அன்ன ஆடுகொடி

நுடங்கும் அரும் பதம் கொண்ட

பெரும் பத வேனில்' (ஐங்.400: 1-3)


மருதம்/மருது


மருத்துவன்பால் மாளாத காதல்

நோயாளன் Maruttuvanpal malata katal

noyalan (the sick trusting the doctor)

(1) அடியவர் - disciple

'வாளால் அறுத்துச் சுடினும்

மருத்துவன்பால் மாளாத காதல்

நோயாளன் போல் மாயத்தால்

மீளாத் துயர்தரினும் ... ... ... ஆளா

உனது அருளே பணிப்பேன்

அடியேனே' (நாலா.691: 1-3)

மருதம் Marutam / marutu (a

tree)

(1) வேளான் நிலம் - agricultural

region

'வேந்தன் மேய தீம்புனல்

உலகமும்' (தொல்.951:3)

(2) வைகறை, விடியல் - early

morning, dawn

'வைகறை விடியல் மருதம்'

(தொல். 954: 1)

(3) ஊடல் - petty quarrel

‘புணர்தல் பிரிதல் இருத்தல்

இரங்கல் ஊடல் இவற்றின்

நிமித்தம் என்றிவை தேருங்காலை

திணைக்குறிப்பொருளே'

(தொல்.960)

(5) முற்றுகை, வெற்றி - beseigt,

victory

'உழிஞை தானே மருதத்துப்

புறனே' (தொல்.1010)

'முழுமுதல் அரணம் முற்றலும்

கோடலும் அனைநெறி

மரபிற்றாகும் என்ப' (தொல், 1011)

(6) செழிப்பு - exuberance

"இருள் புனை மருதின் இன் நிழல்

வதியும்' (நற்.330: 5)

(7) தலைவி - heroine

'உளைப்பூ மருதத்துக் கிளைக்

குருகு இருக்கும் தண்துறை ஊரன்'

(ஐங்.7: 4-5) |

(8) வளமை - fertile/ luxuriant

'அம்ம வாழி, தோழி! மகிழ்நன்

மருது உயர்ந்து ஓங்கிய விரிபூம்

பெருந் துறை' (ஐங்.33: 1-2)

(9) நெடுமை, நறுமணம் - lofty,

fragrant

'கணைக்கால் நெடுமருது கான்ற

நறுந்தாது' (திணை .ஐம்.32: 1)


235