பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மலை


'உரை சால் - உயர் வரைக்

கொல்லிக் குடவயின்' (நற்.185:7)

(9) அழகு - beauty

'அணி வரை மருங்கின் ஐது

வளர்ந்திட்ட' (நற்.344: 1)

(10) புலப்பாடு - perceive

  • ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும்

சிறு வரை சென்று நின்றோர்க்கும்

தோன்றும்' (புறம்.114: 1-2)

(11) பெருமை | பேரளவு - great /

huge

'உயர் மருப்பு ஏந்திய வரை மருள்

நோன் பகடு' (புறம்.161:17)

வளம் - fertile

'இன்று செலினும் தருமே; சிறு

வரை நின்று செலினும் தருமே'

(12) அளவின்மை / அளவிடற்கருமை

- unmeasurable / limitless

'வரை அளந்து அறியாத் திரை

அரு நீத்தத்து' (புறம்.238: 17)

(ஈ) பொதியில் Potiyil

உயர்ச்சி - lofty

ஆடு மழை தவழும் கோடு உயர்

பொதியில்' (நற்.379:11)

(13) அருமை - rare / worthy

'மன் உயிர் அறியாத் துன் அரும்

பொதியில்' (குறு.376: 1)

(14) பெறல் அருமை | தலைவி -

difficult to get / achieve, heroine

'புகல் அரும், பொதியில் போலப்

பெறல் அருங்குரையள்'

(அகம்.322: 14-15)

(உ) குறும்பொறை Kurumporai

(15) வறட்சி | வெம்மை - drought /

hot

'வரிமரல் வாடிய வான்நீங்கு

நனந்தலைக் குறும்பொறை

மருங்கின் கோட்சுரம் நீந்தி'

(அகம். 271: 4-5)

(ஊ) குன்றம் Kunram

(16) தண்மை -cool

'அழுந்துபட வீழ்ந்த பெருந் தண்

குன்ற த்து ' (நற்.2: 1)

உயர்வு - high / lofty

'நாள் மழை தலைய நல் நெடுங்

குன்றத்து' (நற்.17: 1)


மலை


(17) பாதுகாப்பு - security, protection

'குன்ற வேலித் தம் உறைவின்

ஊரே ' (நற்.176: 11)

செழிப்பு, வளமை - fertile

'செழும்பல் குன்றம் நோக்கி,

பெருங்கலி வானம் ஏர்தரும்

பொழுதே!' (குறு.287: 7-8)

(18) விரிவு - wide / spreading

'கோடை நீடிய அகன் பெருங்

குன்றத்து' (அகம்.45: 3)

(19) நன்மை - goodness

'ஒன்று நன்கு உடைய பிறர்

குன்றம்; என்றும் இரண்டும் நன்கு

உடைத்தே கொண் பெறுங் கானம்'

(புறம். 156: 1-2)

(எ) குன்று Kunnu

உயர்வு - high

ஆடு மழை இறுத்தன்று, அவர்

கோடு உயர் குன்றே ' (நற்.68: 10)

கடவுட்டன்மை - divine

'உலகிற்கு ஆணியாகப் பலர்

தொழ, பல வயின் நிலைய

குன்றின் கோடுதோறு' (நற்.139: 1-

2)

(20) நிலைபேறு - stable/everlasting

'குன்று நிலை தளர்க்கும் உருமின்

சீறி' (பதி.63: 10)

(21) பயன் - use

'நிலவரை ஆற்றி, நிறை பயன்

ஒருங்கு உடன் நின்று பெற

நிகழும் குன்று ' (பரி.15: 6-7)

(22) புகழ் - fame

'திசை நாறிய குன்று அமர்ந்து'

(பரி.17:29)

வளமை, அழகு - fertile, beauty

'ஐ வளம் பூத்த அணி திகழ்

குன்றின்மேல்' (பரி.18: 15)

(23) தடை / இடையூறு - obstacle /

hindrance

'குன்று விலங்கு சிறையின்

நின்றனை எனாஅ' (புறம்.169: 5)

(24) குணம் - good quality/ conduct

'குணமென்னும் குன்றேறி நின்றார்

வெகுளி கணமேயும் காத்தல்

அரிது' (குறள்.29)

(25) மதிப்பு - value -

'குன்றன்னார் குன்ற மதிப்பின்

குடியொடு நின்றன்னார் மாய்வர்

நிலத்து' (குறள்.898)


238