பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மழை


'குழவியைப் பார்த்து உறூஉம் தாய்

போல், உலகத்து மழை சுரந்து

அளித்து ஓம்பும் நல் ஊழி

- யாவர்க்கும்' (கலி.99: 4-5)

(9) வலிமை - strength

'அரவு எறி உருமோடு ஒன்றிக்

கால் வீழ்த்து உரவு மழை

பொழிந்த பானாட் கங்குல்'

(அகம்.182:9-10)

(10) கற்பு - chaste

தெய்வம் தொழாஅள் கொழுநன்

தொழுது எழுவாள் பெய் எனப்

பெய்யும் மழை' (குறள்.55)

(11) பயன் எதிர்பாராமை - not

'expecting return of gratitude

கைம்மாறு வேண்டா கடப்பாடு

மாரிமாட்டு என் ஆற்றும்

கொல்லோ உலகு' (குறள்.211)

(12) உதவி - help / assistance


மெய்யா உணரிற் பிறர்பிறர்க்குச்

செய்வதென்? மையார்

இருங்கூந்தல் பைந்தொடி!

எக்காலும் செய்யா ரெனினும்

தமர்செய்வர் பெய்யுமாம் பெய்யா

தெனினும் மழை' (பழமொழி.351)

(13) செல்வம் - wealth

.. .. சீர்த்தக்க செல்வம்

மழைமதர்க்கண் சின்மொழிப்

பேதை ஊர் நல்விருந்து ஆக

நமக்கு ' (கார்.36: 2-4)

(14) ஒலி - sound

'மங்கல கீதம் பாட மழை நிகர்

தூரியம் முழங்க' (பெரிய 268: 1-2)

(15) நடுநிலைமை - neutrality

'உப்பின் பெருங்குப்பை நீர்படியின்

இல்லாகும் நட்பின் கொழுமுனை

பொய்வழங்கின் இல்லாகும்

செப்பம் உடையார் மழையனையர்

இம்மூன்றும் செப்ப நெறி

தூராவாறு' (திரி.83)

(ஆ) மழை தருதல் Malai tarutal

(yield | give rain

கற்பு - chastity

'அரு மழை தரல் வேண்டின்

தருகிற்கும் பெருமையளே' (கலி.39:

6)

(இ) பெயல் Peyal

வண்மை - bounty


மழை


பொறுத்தல் செல்லாது இறுத்த

வண் பெயல்' (நற்.99: 7)

தண்மை - cool -

'வண் பரி தயங்க எழீ இ. தண்

பெயல்' (நற்.121:9)

தூய்மை - pure

மாசு அறக் கழீ இய யானை

போலப் பெரும் பெயல் உழந்த

இரும் பிணர்த் துறுகல்' (குறு.13: 1-

2)

வளமை - fertile

‘பெயின் நந்தி, வறப்பின் சாம்,

புலத்திற்குப் பெயல் போல், யான்

செலின் நந்தி, செறின் சாம்பும்,

இவள் என்னும் தகையோதான்'

(கலி.78: 19-20)

(16) நன்மை - advantage / good

'வேந்தனும் வெம்பகை

தணிந்தனன் தீம் பெயற் காரும்

ஆர்கலி தலையின்று ' (அகம்.54: 2-

3)

(17) மிகுதி - abundance

'காடு கவின் எதிரக் கனை பெயல்

பொழிதலின்' (அகம்.164: 4)

(18) முறைமை, நடுநிலைமை - order /

propriety, neutral)

'முறை கோடி மன்னவன்

செய்யின், உறை கோடி ஒல்லாது

வானம் பெயல்' (குறள்.559)

இயக்கம் - function

'உரவுப் பெயல் பொழிந்த

நள்ளென் யாமத்து' (அகம்.328: 3)

(19) இனிமை - sweet

'கடன் முகந்து தீம்பெயலை யூழ்க்கு

மெழிலி' (இன்னிலை 9:1)

(ஈ) சுரத்திடை பெய்த பெயல்

Curattitai peita peyal (rain in

wilderners)

(20) பயனின்மை , வீண் – waste, futile

'கரப்புடையார் வத்த கடையும்

உதவா துரப்புடைய மன்னர்க்கே

துப்புரவ தல்லால் நிரப்பிடும்பை

மிக்கார்க் குதவஒன் றீதல்

சுரத்திடைப் பெய்த பெயல்'

(பழமொழி. 373)

(உ) வான் Van

கற்பு - chastity

240