பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மழை


... ... ... தேமொழி! - வறன் ஓடின்

வையகத்து வான் தரும் கற்பினாள்'

(கலி.16: 19-20)

வண்மை - benevolance

'மாகவான் நிகர் வண்கை

மாநாய்கன் குலக்கொம்பர்'

(சிலப். 1: 23)

(ஊ) மாரி Mari

வண்மை | கொடை | ஈகை -

benevolance -

ஆர் அரண் கடந்த மாரி வண்

மகிழ்' (நற்.190: 2)

தண்மை - cool

விழுந்த மாரிப் பெருந் தண்

சாரல்' (நற்.244: 1)

வளமை - fertile

'மாரி வாய்க்க! வளம் நனி சிறக்க!'

(ஐங். 10: 2)

(21) புரத்தல் - nurture

'.. .. .. பாரி ஒருவனும் அல்லன்

மாரியும் உண்டு ஈண்டு உலகு

புரப்பதுவே' (புறம்.107)

(22) எல்லை இன்மை - limitless

'அறு குளத்து உகுத்தும், அகல்

வயல் பொழிந்தும், உறும் இடத்து

உதவாது உவர் நிலம் ஊட்டியும்,

வரையா மரபின் மாரிபோல'

(புறம்.142: 1-3)

பயன் – benefit, use

  • சீரியார் கேண்மை சிறந்த

சிறப்பிற்றாய் மாரிபோல் மாண்ட

பயத்தாம்' (நாலடி.232:1-2)

(23) செல்வம்/ பொருள் வரவு - wealth

/ income

'.. .. .. புதுப்புனலும் மாரி அறவே

அறுமே, அவரன்பும் வாரி அறவே

அறும்' (நாலடி.370:2-4)

(24) நிலையாமை, நில்லாமை -

transitory, unstable

'மாரியும் திருவும் மகளிர் மனமும்

தக்குழி நில்லாது பட்டுழிப்

படுமெனும்' (பெருங் உஞ்.35: 156-

157)

(25) அருள், அறம் - mercy, virtue

'அடங்க லில்லேற் கருளினா

லறங்கூர் மாரி பொழிந்தோய் நின்'

(நீலகேசி.139: 3)

(26) காமம் - passion


மழை


'விரிகதிர் ஆரம் மின்னித்

தாரெனும் திருவில் வீசிக்

குரிசில்மா மேகம் பெய்த

கொழும்புயற் காம மாரி' .

(சீவக.2476: 1-2)

(எ) கார் Kar

வளமை , அழகு - fertile, beauty

'நீர் அற்ற புலமே போல்

புல்லென்றாள், வைகறை, கார்

பெற்ற புலமே போல், கவின்

பெறும்' (கலி.38: 11-12)

(ஏ) காலமாரி Kalamari (aeonian

rains)

(27) விரைவு | அழிவு - speed /

destruction

'கால மாரியின் அம்பு தைப்பினும்'

(புறம்.287:3)

(ஐ) துளி Tuli

(28) இன்பம், இரக்கம் - pleasure,

sympathy

'துளி இன்மை ஞாலத்திற்கு

எற்றற்றே வேந்தன் அளியின்மை

வாழும் உயிர்க்கு ' (குறள். 557)

வளமை - fertile

அளியானை அண்ணிக்கும்

ஆன்பால் தன்னை வான்பயிரை

அப்பயிரின் வாட்டம் தீர்க்கும்

துளியானை' (திருநா தேவா.863: 1-

3)

(ஓ) வானம் Vanam

வளம், உயர்வு, மேன்மை -

fertile, lofty, eminent

'மகனுரைக்கும் தந்தை நலத்தை

ஒருவன் முகனுரைக்கும் உள்நின்ற

வேட்கை - அகல்நீர்ப் புலத்தியல்பு

புக்கான் உரைக்கும் நிலத்தியல்பு

வானம் உரைத்து விடும்' (நான்.71)

(ஓ) பருவ மழை Panuva malai

(seasonal rain)

கொடை - benevolance

'பருவ மழைச் செங்கை பற்றி'

(பெரிய 3819: 5)

241