பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாயோன்


(ஈ) நிதிமன்னவன் Nitimannavan

(3) செல்வம், போகம் – wealth, life

pleasures

'போகம் நீடுநிதி மன்னவன்

மன்னும் புரங்கள் ஒப்பன

வரம்பில ஓங்கி' (பெரிய 246: 1-2)

மாயோன் Mayon (Vishnu)

(1) முல்லைத்திணை - forest tract

'மாயோன் மேய காடுறை உலகமும்'

(தொல்.951)

(2) சிறப்பு - eminence

வல்லா ராயினும் வல்லுந

ராயினும் புகழ்தல் உற்றோர்க்கு

மாயோன் அன்ன உரைசால்

சிறப்பிற் புகழ்சான் மாற'

(புறம்.57: 1-3)

(ஆ) நெடியோன் Netiyon

(3) காத்தல் - protect

'.. .. .. .. பல்லா நிரைப்புறங்

காத்த நெடியோனே யாயினும்'

(பழமொழி. 75)

மாரன் Maran (cupid)

(1) அழகு - beauty

'மாரன் ஒப்பார் மார்பணி கலவி'

(பரி.8: 119)

(2) காமம் - passion

'மாதரணி மென்முலைத்தோய்

மாரா' (தனிப்.479: 1)

(ஆ) மதன் Matan

அழகு - beauty

'மயல் விளை மதனற்கும் வடிவு

மேன்மையான்' (கம்ப.பால.672: 4)

மாலம் (குங்கும மரம்) Malam (a tree)

(1) நறுமணம் - fragrance

'புடைவாசம் கொள மாலம்

பூங்கவரி எடுத்தெறிய' (சூளா.170:

3)

மாலை Malai (garland)

(1) கற்பு - chastity |

'கற்பெனும் மாலை வீசி

நாணெனும் களிவண்டு ஓப்பி'

(சிவக.2073: 3)


மாலை


(ஆ) மாலைகள் புலால் நாற்றம்

வீசுதல் Malaikal pulal narram vicutal

(meat smell in garlands)

(2) தீமை, இறப்பு, அழிவு - evil,

destruction, death

'முடியின் மாலைகள் புலாலொடு

முழு முடை நாறும்'

(கம்ப ஆரண்.431: 4)

மாலை (பொழுது) Malai (evening)

(1) துன்பம் - affliction

'மன்றம் போழும் புன்கண் மாலை'

(நற்.73: 4)

(2) அருளின்மை - mercyless

'ஐது வந்து இசைக்கும் அருள் இல்

மாலை ' (நற்.69:9)

(3) அன்பின்மை - loveless

'நள்ளென வந்த நாரின் மாலை'

(குறு.118: 2)

(4) தனிமை - loneliness

'புலம்பு கொள் மாலை மறைய'

(ஐங்.197:3)

(5) உயர்வு | சிறப்பு - eminent /

special

'பீடு கொள் மாலைப் பெரும்

படைத் தலைவ!' (பதி.24: 5)

(6) கருமை - black/ dark

'தேறித் தெளிந்து, செறி இருள்

மால் மாலை' (பரி.12: 82)

(7) மயக்கம் - confusion

'.. .. .. .. இறுத்தந்த மருள் மாலை!'

(கலி.118: 8)

(8) கடுமை - hard/ harmful

'கூற்று நக்கது போலும், உட்குவரு

கடு மாலை!' (கலி.120: 9)

(9) அழகு - beautiful

'கணிநிறை வேங்கை மலர்ந்து

வண்டார்க்கும் அணிநிற மாலைப்

பொழுது' (திணை .ஐம்.9: 3-4)

(ஆ) அந்தி Anti)

துன்பம் - affliction

'உகு பலி அருந்திய தொகு விரற்

காக்கை புன்கண் அந்திக்

கிளைவயின் செறிய' (நற்.343: 5-6)

(10) இறப்பு - death

'பகல் மாய் அந்திப் படுசுடர்

அமையத்து' (அகம்.48: 23)


243