பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மின்னு

(1) தீமை, இறப்பு, அழிவு - evil

omen

'தடித்து இன்றி நெடுவானம்

கலந்து இடித்தன' (கம்ப சுந்.298: 6-

7)

மின்னு Minnu (lightening)

(1) ஒளி - flash

மின்னு வசி விளக்கத்து

வரும்எனின்' (நற்.334: 8) -

(2) வலிமை - power -

'இடி உமிழ் வானத்து இரவு இருள்

போழும் கொடி - மின்னுக்

கொள்வேன் என்றன்னள்' -

(கலி.141: 17-18)

(3) நிலையாமை, அழிவு -

impermanent, destruction

'செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி

எண்ணாத புல்லறி வாளர்

பெருஞ்செல்வம் எல்லில்

கருங்கொண்மூ வாய்திறந்த

மின்னுப்போல் தோன்றி மருங்கறக்

கெட்டு விடும்' (நாலடி.8)

(ஆ) மின் Min

(4) வேகம் - speed

'வீசுமின் புரை காதன்மேதகு'

(திருஞான. தேவா.3884: 1)

(5) மறைவு - disappear / die

'மன்னுநீர் மொக்குள் ஒக்கும்

மானிடர் இளமை இன்பம்

மின்னின் ஒத்து இறக்கும்'

(சீவக.1537: 1-2)

(6) விரைவு - quickness

விண்டலர் கன்ணி சிந்த மின்னிற்

சென்றெய்தினானே' (சீவக.979: 4)

(7) நுண்மை - minute

'வெம்பி வீதி ஓடினார் மின்னின்

அன்ன நுண்மையார்' (சீவக.1103:

4)

(ஒப்பு) Lightning ஆற்றல்,

சுருக்கம், செறிவு, திடீர் நிகழ்வு,

தூண்டுதல், மழை, வலிமை,

வளமை.

மீன் Min (fish)

(1) தலைவி - heroine


மீன்


'... ... .. இருங் கழிக் குருளை

நீர்நாய் கொழு 'மீன் மாந்தி,

தில்லைஅம் பொதும்பில் பள்ளி

கொள்ளும்' (நற்.195:1-3)

(ஆ) மீன் துஞ்சுதல் Min tuncutal

(fish to sleep)

(2) விழிப்பு நிலை - awake

மீன் கண் துஞ்சும் பொழுதும்

யான் கண் துஞ்சேன்' (நற்.319: 10)

(ஒப்பு) Fish அதிர்ஷ்டம்,

அறிவாற்றல், ஆரோக்கியம்,

ஆழமான வாழ்வு, ஆன்மா,

உண்மை , உலக முழுமை,

இரகசியத்தன்மை , கிறித்தவர்கள்,

சுதந்திரம், சொல்லாடாமை,

தன்னடக்கம், தியாகம், தூய்மை ,

நீர், நிறைவு, நிலைபேறு, பணிவு,

மகிழ்ச்சி, மறுபிறப்பு, மீட்பு,

மெய்ம்மை சார்பு, வளமை,

விவேகம், விழிப்புநிலை, வீடுபேறு;

அழிவு, தீமை, பாலியல்,

பேராசை, மடமை.

மீன் (விண்மீன்) Min

(1) மிகுதி - multitude

'அகல் இரு விசும்பின் மீனினும்

பலரே' (குறு.44: 3-4)

(2) ஒளி - light

'சேணோன் மாட்டிய நறும் புகை

ஞெகிழி வான மீனின்

வயின்வயின் இமைக்கும்'

(குறு.150: 1-2)

(3) ஒளிமிகுதி - abundant light

'ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல்

யானை மீன் படு சுடர் ஒளி

வெரூஉம்' (குறு.357:6-7)

(4) வலியின்மை - powerless

'மா இரு விசும்பில் பல் மீன் ஒளி

கெட ஞாயிறு தோன்றியாங்கு,

மாற்றார் உறு முரண் சிதைத்த

நின் நோன் தாள் வாழ்த்தி'

(பதி.64: 12-14)

(5) சுற்றம் - kindred

'பல் மீன் நாப்பண் திங்கள் போல,

பூத்த சுற்றமொடு பொலிந்து

தோன்றலை' (பதி.90: 17-18)

(6) ஒளிர்தல் - twinkle / dazzle

246