பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மீன்கணின் அளவு


மீன் பூத்தன்ன தோன்றலர்'

(திருமுரு.169)

(7) சிறுமை (சிறிய அளவு) - smallness

'பல் மீன் நடுவண் பால் மதி

போல' (சிறுபா.219)

(8) அறிவிலார் - ignorant

'ஆயிரவ ரானும் அறிவிலார்

தொக்கக்கால் மாயிரு ஞாலத்து

மாண்பு ஒருவன் போல்கலார்

பாய் இருள் நீக்கும் மதியம்போல்

பல்மீனும் காய்கலா ஆகும் நிலா'

(பழமொழி.27)

மிகுதி, பன்மை - excess, multitude

'காலாடு போழ்திற் கழிகிளைஞர்

வானத்து மேலாடு மீனின்

பலராவர்' (நாலடி. 113: 1-2)

(9) அளவின்மை - extensive / countless

'அந்தரத்து அலர்ந்த பன்மீன்

எனைத்துள அனைத்தும் மாதோ'

(சீவக.3048: 4)

(ஒப்பு) Stars ஆன்மாவின்

நிலைபேறு, உயர்பண்பு, உயர்ந்த

குறிக்கோள், எட்டமுடியாத

குறிக்கோள், எச்சரிக்கை நிலை,

ஒளி, கடவுளின் இறைநிலை,

கற்றல், கிறித்துவின் பிரப்பு,

சமூகச் சமநிலை, சேர்க்கை ,

தூய்மை, தெய்வீக வழிகாட்டி,

தொடர்முறைச் சுழற்சி, நம்பிக்கை,

நிலையான தன்மை, பிரபஞ்சம்,

புனிதப்பண்பு, பெருக்கத் தன்மை,

மனிதன், மனித ஆற்றல்,

முழுமை, மெய்ம்மை சார்ந்த

விழிப்பு நிலை, முன்னறிவிப்பு,

விதி,

ஐந்து முனைகளுடைய விண்மீன்

- வானுலகம்.

ஆறு முனைகளுடைய விண்மீன்

- கடல் தெய்வம், பால்

வேறுபாடற்ற ஒற்றுமை.

மீன்கணின் அளவு Minkanin alavu (size

of fish's eye)

(1) சிறிய அளவு - smallness / a little

மீன் கணின் அளவும்

வெற்றிடங்கள் இன்மையால்'

(சீவக.54: 1)


முகம்


(ஆ) கயற்கணின் அளவு

Kayarkanin alavu

சிறிய அளவு - smallness / very

little

'கயற்கணின் அளவும் கொள்ளார்

கவற்சியுள் கவற்சி கொண்டார்'

(சீவக. 1393: 3)

முக்குடை Mukkutai

(1) சமணம் - Jainism

'மொய் வினை இருள் கண்

போழும் முக்குடை மூர்த்தி பாதம்'

(சீவக.3145: 3)

முக்குளநீர் Mukkulanir (water of a

pond)

(1) தீவினை அகற்றுதல், நன்மை -

remove wrong deeds, goodness

வேயனவே தோளுமை

பங்கன்வெண்காட்டு முக்குளநீர்

தோய்வினையார் , அவர்தம்மைத்

தோயாவாம் தீவினையே'

(திருஞான. தேவா,123: 3-4)

முக்கோல் Mukkol (trident staff)

மெய்ம்மை , வாய்மை - fact, truth

'உரை சான்ற முக்கோலும்'

(கலி.9:2)

முகம் Mukam (face)

(1) வெளிப்படை - open / expressive

வெள்ளம் வருங்காலை ஈரம்பட்

டஃதேபோல் கள்ள முடையாரைக்

கண்டே அறியலாம் உள்ளமர்

கண்ணாய்! ஒளிப்பிலும் உள்ளம்

படர்ந்ததே கூறும் முகம்'

பழமொழி.144)

(2) தெளிவு - clear / revealing

நோக்கி அறிகல்லாத் தம் உறுப்புக்

கண்ணாடி நோக்கி அறிப

அதுவேபோல் - நோக்கி

முகனறிவார் முன்னம் அறிப

அதுவே மகனறிவு தந்தை யறிவு'

(பழமொழி. 145)

(3) உள்ளக்குறிப்பு - heart' intension

'நாற்ற முரைக்கும் மலருண்மை

கூறிய மாற்ற முரைக்கும்

வினைநலந் தூக்கின்

அகம்பொதிந்த தீமை

247