பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யானை


(இ) யானை - கை வைத்து

உறங்குதல் Yanai kai vaittu urankutal

(17) தீமை, இறப்பு - evil omen

'மைந்துடை யானை கைவைத்து

உறங்கவும்' (புறம்.229: 18)

(ஈ) களிற்று யானை Kalirru yanai

(he elephant)

சினம் - wrath

'பாகன் நெடிது உயிர்வாழ்தல்

காய்சினக் கொல்களிற்று யானை

நல்கல் மாறே' (அகம்.336: 13-14)

(உ) களிறு Kaliru

வலிமை - power

இனம் சால் வயக் களிறு பாந்தட்

பட்டென' (நற்.14: 8)

சினம் - wrath

கடாஅம் செருக்கிய கடுஞ் சின

முன்பின் களிறு நின்று இறந்த

நீர் அல் ஈரத்து' (நற்.103: 2-3)

(18) ஆண்மை | சிறப்பு - manly /

eminent

'மணி மயில் தொழில் எழில்

இகல் மலி திகழ் பிறிது இகழ்

கடுங் கடாக் களிற்று

அண்ணலவரோடு'

(பரி.தி.1: 63-64)

(19) ஊக்கம் - motivation /

encouragement

'சிதைவிடத்து ஒல்கார் உரவோர்

புதை அம்பின் பட்டுப் பாடு

ஊன்றும் களிறு' (குறள்.597)

(20) தலைவன் - hero

'ஒல்லோமென் றேங்கி உயங்கி

இருப்பளோ கல்லிவ ரத்த மறிபெய்

சிலம்பொலிப்பக் கொல்களிறு

அன்னான்பின் செல்லுங்

கொலென்பேதை மெல்விரல் சேப்ப

நடந்து' (ஐந்.எழு.40)

(21) மங்கலம் - anspicious

'மங்கல மழகளிறு அனைய

செல்கையன்' (சூளா.78: 3)

(ஊ) களிற்று ஒருத்தல் kalirru

oruttal (lone elephant)

(22) தனிமை - lonely /

dangerous


யானை

'வில் கடிந்து ஊட்டின் பெயரும்

கொல் களிற்று ஒருத்தல் சுரன்

இறந்தோரே' (நற்.92: 8-9)

(23)கடுமை - severity -

'காழ்வரை நில்லாக் கடுங் களிற்று

ஒருத்தல்' (கலி.2: 26)

வலிமை - power

'பொறி நுதற் பொலிந்த வயக்

களிற்று ஒருத்தல்' (அகம்.78: 4)

(எ) இனம் பிரி ஒருத்தல் Inam

piri oruttal |

தனிமை, ஆபத்து - lonely, danger

'பால் மருள் மருப்பின், உரல்

புரை பாவு அடி, ஈர் நறுங் கமழ்

கடா அத்து, இனம் பிரி ஒருத்தல்

ஆறு கடி கொள்ளும் வேறு புலம்

படர்ந்து ' (கலி.21: 1-3)

(ஏ) வேழம் Velam

சினம் - wrath

உரவுச் சின வேழம் உறு புலி

பார்க்கும்' (நற்.336: 7)

வலிமை - strength

'மதனுடை வேழத்து வெண் கோடு

கொண்டு ' (பதி.30: 11)

ஆற்றல் - power

'பொரு சமம் கடந்த புகழ் சால்,

வேழம்' (பரி.21: 2)

வீரம் - valour)

'மறம் மிகு வேழம், தன் மாறு

கொள் மைந்தினான்' (கலி.53: 3) -

விரைவு - speed

'கால் கிளர்ந்தன்ன வேழம்

மேல்கொண்டு' (திருமுரு.82)

(29) உயர்வு | மேன்மை - lofty/ high

'புகர்முகம் பூழிப் புரள

உயர்நிலைய வெஞ்சின வேழம்

பிடியோடு இசைந்தாடும்' (கார்.38:

1-2)

(ஐ) வேழம் எதிர்தல் Velam etirtal

(facing an elephant)

(30) ஆபத்து - danger

'கடுஞ்சின வேழத்து எதிர்சேறல்

இன்னா ' (இன்னா .30: 2)

(ஓ) பிணிமுகம் Pinimukam

(31) உயர்வு - lofty

257