பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யானை


'சேயுயர் பிணிமுகம் ஊர்ந்து'

(பரி.5: 2)

வீரம் - valour

‘ஓடாப் பூட்கைப் - பிணிமுகம்

வாழ்த்தி ' (திருமுரு.247)

(ஓ) கரி Kari -

வலிமை - strength

'ஆங்க அணிநிலை மாடத்து

அணிநின்ற பாங்காம் மடப் பிடி

கண்டு, வயக் கரி மால் உற்று,

நடத்த நடவாது நிற்ப' (பரி.10: 41-

43)

(ஔ) கோண்மா Konma

வலிமை, ஆற்றல் -- strength, power

'கொடுவரி பாயத் துணையிழந்து

அஞ்சிக் கடுவுணங்கு பாறைக் கடவு

தெவுட்டு நெடுவரை அத்தம்

இறப்பர்கொல் கோண்மாப்

படுபகை பார்க்கும் சுரம்'

(ஐந்.எழு.37)


(க) எஃகொழி களிறு Ekoli kaliru

(32) துன்பம், வருத்தம் - distress

'பைதல் - நெஞ்சத்து மையல்

கொள்ளா , எஃகொழி களிற்றின்

வெய்துயிர்த்து உயங்கி'

(பெருங் உஞ்.33: 108-109)


(ங) பிடிக்களிறு Pitikkaliru

(33) இணைவு - pair

'பிடிக்களிறு என்னத் தம்மிற்

பிணைபயின்ற அணை வரால்கள்'

(திருநா. தேவா.509: 3-4)

(ச) பிடி Piti

(34) வேகம் | விரைவு - quickness

'கடுகிய விசையொடு காற்றென

உராஅய் முடுகிய இரும்பிடி

முகத்தொடு தாக்கிய'

(பெருங். உஞ்.48: 119-120)

(3) போதகம் Potakam

(35) மங்கலம் - anspicious

'மங்கலம் தரு மழவிளம் போதகம்

வரும் இரு மருங்கெங்கும்'

(பெரிய,2051:3-4) |


யானை..


(ட) யானைகள் தொழுவில்

அடைபட்டிருப்பது போல

அடங்கியிருத்தல் Yanaikal toluvil

ataipattiruppatu pola atankiyiruttal

(36) தீமை, இறப்பு, அழிவு - evil

omen)

'தொழுவில் நின்றன சூழி மா'

(கம்ப.யுத்.3664: 4)

(ஒப்பு) Elephant அரசமை,

அரசர்களின் வலிமை, அறிவு

நுட்பம், அசைக்க இயலாத

உறுதி, அடக்கம், அதிக

எடையுள்ள உருவமற்ற தன்மை,

இரக்கம், இறைமை, ஊர்தி,

எளிமைநயம், கடவுட்பற்று,

கடமையுணர்ச்சி, கற்புடைமை,

கன்னித்தன்மை, சக்தி, செல்வம்,

செயலறிவு, தற்கட்டுப்பாடு,

தன்னடக்கம், தடையை நீக்கும்

விலங்கு, தொடக்கம், தூய்மை,

நம்பிக்கை, நடுநிலைமை, நன்மை,

நிலைபேறு, நீண்ட நினைவாற்றல்,

பணிவு, பண்புயர்வு, முடிவு,

வலிமை, வளமை, விநாயகக்

கடவுள்; அக உணர்ச்சியின்மை ,

அசட்டை மனப்பான்மை,

அழகற்ற தன்மை , அறியாமை,

கொடூரம், தற்பெருமை,

தன்வயமின்மை.

யானை வாய்புகு கவளம் Yanai

vaypuku kavalam (rice ball in elephant's

mouth)

(1) அழிவு - destruction

'கருங்களி மத நல்யானை வாய்புகு

கவளமே போல் பெருங்களியாளன்

காலன் பிறை எயிறு அணிந்து

நின்ற இருங்களி யாணர் வாழ்வில்

இமைப்பிடை பெரிது கண்டாய்'

(சூளா .1860: 2-4)

258