பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யானை...


யானையினது பட்டமும்

பொற்கொட்டையும் சிதைதல்

Yanaiyinatu pattamum porkottaiyum citaital

(head ornament of elephant being

destroyed)

(1) தீமை, தடை, இறப்பு - bad omen

'மந்தரம் என்னு மத்த யானை நீல

நெடுவரை நெற்றித் தாகிய கோலக்

கோங்கின் கொழுமலர் கடுப்புறு

சூறைக் கடுவளி பாறப் பறந்தெனப்

பட்ட மடுத்த கொட்டையொடு

பாறவும்' (பெருங் மகத.27:71-75)

ரதி Rati (Rati, lady of Cupid)

(1) அழகு - beauty

'இருபந்தந்த - மெனும்பொற்

பயோதர மென்னசொல்

லரதிக்கெண் மடங்கிவள்'

(தனிப். 799: 1-2)

லேகை Lekai (சங்க லேகையும் சக்கர

லேகையும்) (line on palm)

(1) அரசமைதி - royality

'சங்க லேகையும் சக்கர லேகையும்

அங்கை உள்ளன வையற் காதலால்'

(சூளா . 114: 1-2)

வச்சிரம் Vacciram (diamond)

(1) உறுதி - firm

'வள்ளிதழ் மாலை மார்பன் வச்சிர

மனத்தன் ஆனான்' (சீவக.2732: 4)

வசம்பு Vacampu (a spice)

(1) வெண்மை - white

'வால்வெள் வசம்பும் வள்ளிதழ்க்

காந்தளும்' (பெருங். உஞ்.50: 28)

வசுந்தரி Vacuntari (a queen)

(1) கற்பு, தூய்மை -chastity, purity


வடபுலம்


'கோசலத்து அரசன் மாபெரும்

தேவி மாசில் கற்பின் வசுந்தரி

என்னும் தேனிமிர் கோதை

சேடியேன் யான்' (பெருங்.வத்.13:

36-38)

வஞ்சி Vaici (a creeper)

(1) முல்லைத்திணை, போர் - forest

tract, war

'வஞ்சி தானே முல்லையது

புறனே எஞ்சா மண் நசை

வேந்தனை வேந்தன் அஞ்சுதகத்

தலைச்சென்று அடல்குறித்தன்றே'

(தொல்.1007, 1008)

(2) வளமை - fertile

'வஞ்சி அன்ன என் வளநகர்

விளங்க' (அகம்.263: 12)

(3) வெற்றி, புகழ் - victory, fame

'விண் பொரு புகழ், விறல் வஞ்சி'

(புறம்.11: 6)

(ஆ) வஞ்சி நடுதல் Vanci natutal

(plant vanci)

(4) மங்கலம் - anspicious

'காய்க்குலைக் கமுகும் வாழையும்

வஞ்சியும் பூக்கொடி வல்லியும்

கரும்பு நடுமின்' (மணி.1: 46-47)

வடபுலம் Vatapulam (Northern Region)

(1) பாதுகாப்பு - protection

'நாமம் அறியா ஏம வாழ்க்கை

வடபுல வாழ்நரின்'

(பதி.68: 12-13)

(ஆ) வடக்கிருத்தல் Vatakkiruttal

(2) இறப்பு - death

'கரிகால் வளவனொடு

வெண்ணிப் பறந்தலைப் பொருது

புண் நாணிய சேரலாதன் அழி

கள மருங்கின் வாள்

வடக்கிருந்தென, இன்னா இன்

உரை கேட்ட சான்றோர்'

(அகம்.55: 10-13)

(ஒப்பு) North இரவு, உலகத்தின்

நடுக்கோடு, இறைமை, துருவ

நட்சத்திரம், சொர்க்கத்தின்

வாயில், மறைபொருள்; அழிவு,

இருள், இறப்பு, தீமை.


259