பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வருணன்


வருணன் Varunan (god of rain)

(1) நெய்தல் திணை - sea shore region

வருணன் மேய பெருமணல்

உலகமும்' (தொல்.951)

(2) ஈகை - benevolence -

'தருமன் தண்ணளியால் தனது

ஈகையால் வருணன் கூற்றுயிர்

மாற்றலின் வாமனே' (சீவக. 160:

1-2)

வல்லு Vallu (chess)

(1) திறமை / ஆற்றல் - capacity /

capable

'வல்லுப் போர் வல்லாய்! ...........'

(பரி.18: 41)

(2) கவனம் - concentration / attention/

alertness

'கவை மனத்து இருத்தும் வல்லு

வனப்பு ஒழிய' (அகம்.377: 8)

வலம்புரி Valampuri (a rare variety of

conch)

{1) ஒலி - sound

'வலம்புரி வான்கோடு நரலும்

இலங்குநீர்' (நற். 172: 8)

(2) வெண்மை - white

'பொலம்புரி ஆடை! வலம்புரி

வண்ண ' (பரி.3: 88)

(3) தூய்மை - pure

'துணை புணர்ந்து எழுதரும் தூ

நிற வலம்புரி' (கலி.135: 1)

(4) வளமை - fertile)

'அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி

சொரிந்து' (அகம்.201: 5)

(5) சிறப்பு, புகழ் - eminent, fame

வலம்புரி அன்ன, வசை நீங்கு

சிறப்பின்' (பெரும்.35)

(6) வெற்றி, தூய்மை - victory, pure

'தூ வலம்புரி உடைய திருமால்'

(நாலா.275:3)

வலம்புரி வயிற்றிடைப் பிறந்த மாமணி

Valampuri vayirritai piranta mamani (great

gem in the valampuri conch)

(1) சிறப்பு - eminence

'வலம்புரி வயிற்றிடைப் பிறந்த

மாமணி நலம்புரி பவித்திரம் ஆகு

நாமநீர்' (சூளா.417: 1-2)


வலை


வலம் வருதல் Valam varutal (ascend to

the right/circumambulate)

(1) உயர்வு - lofty

'மன்னுயிர் புரைஇய வலனேர்பு

இரங்கும் கொண்டல் தண்டளிக்

கமஞ்சூல் மாமழை'

(பதி.24: 27-28)

(2) சிறப்பு - eminence

'புத்தேளிர் கோட்டம் வலம் செய்து

இவனோடு புக்க வழி எல்லாம்

கூறு' (கலி.82: 4-5)

(ஆ) வலம் வீழ்த்தல் Valam

vilttal (fall to the right)

(3) வெற்றி கொள்ளல் - win over

துளங்குநடை மரையா வலம்படத்

தொலைச்சி' (அகம்.3:7)

வலை Valai (net)

(1) வளம் - fertile

'வேட்டம் பொய்யாது வலைவளம்

சிறப்ப' (நற்.38: 1)

(2) நுண்மை / நுட்பம் - minute

'நுண் வலைப் பரதவர் மட மகள்'

(குறு.184; 6)

(3) கொள்ளுதல் - catch

'கடியுடை மரந்தொறும் படுவலை

மாட்டும்' (குறு.342: 3)

(4) பயன் - benefit

'இரும் புலாக் கமழும் சிறுகுடிப்

பாக்கத்து குறுங் கண் அவ்

வலைப் பயம் பாராட்டி'

(அகம்.70: 2-3)

(5) உலகப் பற்று – worldly attachment

'கொலைஞர் உலையேற்றித்

தீமடுப்ப ஆமை நிலையறியாது

அந்நீர் படிந்தாடி யற்றே,

கொலைவல் பெருங்கூற்றம்

கோள்பார்ப்ப ஈண்டை

வலையகத்துச் செம்மாப்பார்

மாண்பு' (நாலடி.331)

(6) பார்வை - seeing

'கொடுங்கண் வலையால் உயிர்

கொல்வா னுந்தை நெடுங்கண்

வலையால் உயிர்கொல்வை

மன்னீ யும்' (சிலப். 7.18)

(7) பாதுகாப்பு - protect

'கல்விப் பாகரில் காப்புவலை ஓட்டி'

(மணி.18: 165)


261