பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வலை


(8) காமம் - passion

'காமாத்தம் எனும் கார்வலைப் பட்டு

நான் போமாத்தை அறியாது

புலம்புவேன்' (திருநா. தேவா.201; 1-2)

(9) புலன் - senses

'பஞ்ச பூத வலையிற் படுவதற்கு

அஞ்சி நானும் ஆமாத்தூர் அடிகளை'

(திருநா. தேவா.202: 1-2) -

(10) வஞ்சனை - deceit

'வஞ்ச வல்வினையுள் வலைப்பட்டு'

(சுந்.தேவா.192: 4)

(11) நட்பு - friendship

'நட்பு வலைக் கிழமையின்

நம்பொருட்டாக' (பெருங். மகத.18:

(12) அன்பு | காமம் | ஆசை - love /

passion / desire

'கண்வலைக் காமுகர் என்னும்

மாபடுத்து ஒள்நிதித் தசைதழி இ

உடலம் விட்டிட்டும்

பெண்வலைப் படாதவர் பீடின்

ஓங்கிய அண்ணல் அம் கடிநகர்

அமைதி செப்புவாம்' (சீவக.78)

(13) சொல் - word

'சொல் வலை வேட்டுவன்' (புறம்.252:

5)

(ஆ) வலைப்படுதல் Valaippatutal

(netted)

(14) அகப்படுதல் - caught

கண் வலைப் படூஉம் கான

லானே ' (நற்.184: 7)

(15) துன்பம் - affliction

'நல் மயில் வலைப் பட்டாங்கு'

(குறு.244: 5)

(16) சிக்குதல் - entangle

பொய்வலைப் படு உம் பெண்டு

தவப் பலவே' (ஐங்.283: 5)

(இ) வலைபரிதல் Valaiparital (torn

net)

(17) தப்புதல் - escape

'.. .. .. .. வெவ் வினைக் கொலை

வல் வேட்டுவன் வலை பரிந்து

போகிய' (நற்.189: 6-7)

Valai virittal

(ஈ) வலை விரித்தல்

(spread net)

(17) நோக்கம் - seeing


வன்னி


‘வலை விரித்தன்ன நோக்கலை'

(பதி.51: 36)

(உ) புலிக்கான வலையில் நரி

அகப்படுதல் Pulikkana valaiyil nari

akappatutal (fox in the tiger's net)

(19) பொருந்தாமை - unsuitable

'இரும் புலி கொண்மார் நிறுத்த

வலையுள் ஓர் ஏதில் குறு நரி

பட்டற்றால்' ((கலி.65: 24-25)

(ஒப்பு) Net அன்பு, காதல்,

பிணைப்பு, மீனவர், வளமை;

இறப்பு, சூழ்ச்சி,

வள்ளை Vallai (a creeper)

(1) வெண்மை - white

'வள்ளை வெண்மலர் அஞ்சி'

(சுந்.தேவா.150:3)

வளி ஏறி கொம்பு Vali eri kompu

(creeper swaying in wind)

(1) வருத்தம் / துன்பம் - affliction /

suffering

'வளி எறி கொம்பின் வருந்தி

மெய்ந் நடுங்கி' (மணி.24; 86)

வளையொடும் தலைமுடி திருத்தல்

Valaiyotum talaimuti tiruttal (correct

bangles and hair)

(1) பெண்மை | தோல்வி /

வீரமின்மை - feminine / defeat /

cowardice

'இளையருள் பெரியவன்

சொல்லும் எம்மிறைக்கு உளைவன

செய்தவர் உயிரை மற்றவர்

கிளையொடுங் கீண்டர சாடு

மன்றெனில் வளையொடும்

தலைமுடித் திருத்து வாழ்துமே'

(சூளா .1261)

வன்னி Vaani (fire)

(1) கற்பு - chastity

'வன்னி மரமும் மடைப்பளியும்

சான்றாக முன்னிறுத்திக் காட்டிய

மொய்குழலாள் பொன்னி'

(சிலப்.21: 5-6)

(2) ஒளி, வெம்மை - light, heat



























262