பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீழ்


'.. .. .. போர்செய் ஆடவர்

ஏவிளை கொடுஞ்சிலை இற்று

வீழ்ந்தவே' (சூளா. 1222: 3-4)

வீழ் (விழுது) Vil (aerial roots)

(1) மகன், ஆதாரம், தாங்குதல் -

son, support, basic

'சிதலை தினப்பட்ட ஆல மரத்தை

மதலையாய் மற்றதன் வீழூன்றி

யாங்குக் குதலைமை தந்தைகட்

டோன்றிற்றான் பெற்ற புதல்வன்

மறைப்பக் கெடும். (நாலடி.197)

வீழ்ந்த வெண்மலர் வெறுநிலத்தில்

வீழாது காலில் விழுதல் Vilnta

venmalar verunilattil vilatu kalil vilutal

(white flower falling at foot and not on

floor)

(1) இழந்ததைப் பெறல் - regain

வீழ்ந்த வெண்மலர் வெறுநிலம்

படாது தாழ்ந்த கச்சைநின்

தாள் முதல் தங்கலில் பிரிந்த

போகம் பெயர்த்தும் பெறுகுவை'

(பெருங். இலா. 13: 57-59)

வீழிக்கனி Vilkkani (a fruit)

(1) சிவப்பு நிறம் - red

'பாழிப் புயம் அம்பு உருவப்

படலும் வீழிக் கனி போல் புனல்

வீச வெகுண்டு ' (கம்ப.யுத்.2313: 1-

2)

வெட்சி Vetci (a flower)

{1) குறிஞ்சித்திணை | போர்

mountain tract / war

வெட்சி தானே குறிஞ்சியது

புறனே உட்கு வரத்தோன்றும்

ஈர்ஏழ் துறைத்தே வேந்து

விடுமுனைஞர் வேற்றுப்புலக்

களவின் ஆ தந்து ஓம்பல்

மேவற்றாகும்'

(தொல், 1002, 1003)

(2) போர் - war

'வெட்சி மா மலர், வேங்கையொடு

விரைஇ. சுரி இரும் பித்தை

பொலியச் சூடி' (புறம்.100: 5-6)

(3) நிரை கொள்ளல் - capture of

herds


வெண்னெய்


வெட்சி மலர் புனைய

வெள்வாளுழத்தியும் வேண்டும்

போலும்' (சிலப். 12: 13)

வெண்குடை கால் பரிந்து உலறல்

Venkutai kal parintu ularal (parasol

falling, rod breaking)

(1) தீமை , இறப்பு - evil omen, death

'காவல் வெண்குடை கால் பரிந்து

உலறவும்' (புறம்.229: 20)

வெண் சாந்து அணிதல் Ven cantu

anital (smear white paste)

(1) மங்கலச் செய்தி அறிவிப்பு -

announce festivity)

"செல்வச் சேனை வள்ளுவ

முதுமகன் நறுவெண் சாந்தொடு

மாலை அணிந்து மறுவில்

வெண்துகில் மருங்கணி பெறீஇ'

(பெருங். இலா.2: 34-36)

வெண்ணெய் Vennei (butter)

(1) உருகும் தன்மை , நிலையாமை -

melting, transient

'சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற

பிறவா வெண்ணெய் உருப்பு

இடந்தன்ன உவர் எழு களரி ஓமை

அம் காட்டு ' (நற்.84: 6-8)

(2) மென்மை - soft / smooth

வெண்ணெய் போன்று ஊறு

இனியள்' (சீவக.480: 1)

(3) அழிவு - destroy

'பின்னை வெண்ணெயிற்

றிரண்டபின் பிழைக்கவும்

பெறுமே' (சீவக.2754: 4)

(ஆ) அழலுறு வெண்ணெய்

Alaliru venney (butter in fire)

(4) துன்பம், தவிப்பு - sorrow,

suffering

'அழலுறு வெண்ணெய் போல

அகம் குழைந்து உருகி ஆற்றாள்'

(சீவக. 1: 408.1)

(இ) வெண்ணெய் தீயுறல் Venney

tiyural)

(5) மெலிவு, துன்பம் - leanness,

Sorow


212