பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளாங்குருகு (7) உயர்வு - lofty / high

வெள்ளத்து அனைய மலர்நீட்டம்

மாந்தர்தம் உள்ளத்து அனையது

உயர்வு' (குறள், 595)

(8) அளவற்ற தன்மை -

unmeasurable/plenty

வெள்ளம் பகையெனினும்

வேறிடத்தார் செய்வதென் கள்ளம்

உடைத்தாகிச் சார்ந்த கழி நட்பு

(பழமொழி.297: 1-2)

(ஆ) ஓதம் Otam

(9) மிகுதி - much, exceeding

'காதலில் தீரக் கழிய முயங்கன்மின்

ஓதம் துவன்று ஒலிபுனல் ஊரனைப்

பேதைபட்டு ஏங்கன்மின் நீயிரும்

என்னிலா ஆசை ஒழிய உரைத்து'

(ஐந்.எழு.50)

(ஒப்பு) Flood அடங்காமை, அழிவு,

கடவுளின் பழியெதிர்ச் செயல்,

கண்ணீர், பலத்த மழை,

தண்டனை, புதிய வரலாறு,

மறுபிறப்பு, மறைவிலிருந்து

மீண்டும் வெளிப்படுதல், முடிவு,

வளர்ச்சி.

வெள்ளாங்குருகு Vellaikuruku (a

bird)

(1) பரத்தை - prostitute

வெள்ளாங்குருகின் பிள்ளை

செத்தென, காணிய சென்ற மட

நாரை' (ஐங். 151: 1-2)

வெள்ளின் மாலை Vellin malai

(1) கடுமை – harsh / cruel

'வெள்ளின் மாலையும் விரிந்த

வெண்டலைகளும் கரிந்த .. .. ..

கள்ளியாரிடைக் கலந்ததோர்

தோற்றமும் கடிதே' (நீலகேசி.30:

1,4)

வெள்ளை (வெள்ளாடு) Vellai (goat)

(1) வளம் - fertility

சிறுதலை வெள்ளைத் தோடு

பரந்தன்ன ' (குறு.163: 2)

(ஆ) வெள்ளாடு Vellatu

(2) குற்றம் - blemish/crime


வெள்ளி


'தம்குற்றம் நீக்கலர் ஆகிப்

பிறர்குற்றம் எங்கேனும் தீர்த்தற்கு

இடைப்புகுதல் - எங்கும் வியன்

உலகில் வெள்ளாடு தன்வளி

தீராது அயல்வளி தீர்த்து விடல்'

(பழமொழி. 38)

வெள்ளி (விண்மீன்) Velli (a star/venus)

(1) ஒளி - glow / light

குணக்குத் தோன்று வெள்ளியின்,

இருள் கெட விரியும்' (நற்.230: 4)

(2) மழை - rain

'அழல் சென்ற மருங்கின் வெள்ளி

ஓடாது மழை வேண்டு புலத்து

மாரி நிற்ப' (பதி.13: 25-26)

(3) பயன், சிறப்பு, வளமை - utility,

eminence, fertility

'வறிது வடக்கு இறைஞ்சிய சீர்

சால் வெள்ளி பயம் கெழு

பொழுதோடு ஆநியம் நிற்ப

(பதி.24: 24-25)

(4) பயன், தண்மை , வளமை - use,

cool, fertile |

'நிலம் பயம் பொழிய, சுடர் சினம்

தணிய, பயம் கெழு வெள்ளி

ஆநியம் நிற்ப' (பதி.69: 13-14)

(5) மாசின்மை - stainless -

'நீர்த் திரள் கடுக்கும் மாசு இல்

வெள்ளி ' (அகம்.142: 16)

(6) விடியல், புதிய தொடக்கம் -

dawn, new beginning

'வெள்ளி முளைத்த நல் இருள்

விடியல்' (பொரு.72)

(ஆ) வெள்ளி தென்புலம் படர்தல்

Velli tenpulam patartal (venus going

south)

(7) தீமை, வறட்சி, பயனின்மை ,

மழையின்மை , வளனின்மை - evil

omen, drought, futile, dry, infertile

இலங்குகதிர் வெள்ளி தென்புலம்

படரினும் அஞ்தண் காவிரி

வந்துகவர் பூட்ட' (புறம்.35: 7-8)

(இ) மீன் Min

(8) மழை - rain

'மீன்வயின் நிற்ப வானம் வாய்ப்ப

(பதி.90: 1)

(ஈ) வெண்மீன் Venmin

276