பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளோத்திரம்


(9) புகழ் - fame -

'வசையில் புகழ் வயங்கு

வெண்மீ ன்' (பட்.1)

(ஒப்பு) Venus அழகு, அமைதி,

அன்பு, இசைவு, உறவு, கவர்ச்சி,

தெற்குத்திசை, தூய்மைப்பாடு,

மயக்குதல், மறுபிறப்பு:

இடர்ப்பாடுகள், இறப்பு, போரின்

விளைவுகள்.

வெள்ளோத்திரம் Vellbttiram (a flower)

(1) பாலை நிலம் - wilderness

'மால் வெள்ளோத்திரத்து மை இல்

வால் இணர், அருஞ் சுரம்

செல்வோர், சென்னிக் கூட்டும்'

(ஐங்.301: 1-2)

வேங்கை Vehkai (a tree)

(1) கடவுட்டன்மை - devine / godhood

எரி மருள் வேங்கைக் கடவுள்

காக்கும்' (நற்.216: 6)

(2) கார்காலம் / முன்னுரைத்தல் -

rainy season / foretell

'கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய்

வேங்கை ' (நற்.373: 6)

(3) நறுமணம் - fragrance

'வேங்கையும் காந்தளும் நாறி'

(குறு.84: 4)

(4) அழகு - beauty

'புன வேங்கைத் தாது உறைக்கும்

பொன் அறை முன்றில்'

(கலி.39:33)

(5) திருமணம்- marriage

'மன்றல் வேங்கை கீழ் இருந்து,

மணம் நயந்தனன், அம்

மலைகிழவோற்கே' (கலி.41: 43-44)

(6) குறிஞ்சித்திணை - mountanous

region

'முதிர் இணர் ஊழ் கொண்ட

முழவுத்தாள் எரிவேங்கை ' (கலி.44:

1)

(7) மணநாள் - wedding day

'குன்ற வேலிச் சிறுகுடி ஆங்கண்

மன்ற வேங்கை மணநாட் பூத்த

மணியேர் அரும்பின் பொன்வீ

தா அய்' (அகம்.232: 6-8)

(8) வெற்றி, வலிமை - victory, strength

|power


வேம்பு


'கருங்கா லினவேங்கை கான்றபூக்

கன்மே லிருங்கால் வயவேங்கை

யேய்க்கு' (திணைமாலை.25:1-2)

(9) பாதுகாப்பு - security

'தன் குறை இது என்னான், தழை

கொணரும் தண் சிலம்பன் நின்

குறை என்னும் நினைப்பினனாய்.

பொன் குறையும் நாள் வேங்கை

நீழலுள் நண்ணான்:

எவன்கொலோ, கோள் வேங்கை

யன்னான் குறிப்பு'

(திணைமாலை. 31:4)

(10) உயர்வு | மேன்மை / இறைமை

- lofty, excellent, godhood

'பொலம்பூ வேங்கை நலங்கிளர்

கொழு நிழல் ஒரு முலை

இழந்தாளோர் திருமா பத்தினிக்

கமரர்க் கரசன் தமர்வந்

தீண்டியவள் காதற் கொழுநனைக்

காட்டி யவளொடெங் கட்புலங்

காண விட்புலம் போய'

(சிலப் பதிகம்.4-9)

வேந்தன் Véntan (king)

மருதத்திணை - agricultural tract

'வேந்தன் மேய தீம்புனல் உலகமும்'

(தொல்.951)

வேம்பு Vempu (neem)

(1) மன்னர் அடையாளம் - sign of

King

'போந்தை வேம்பே ஆர் என

வரூஉம் மாபெருந் தானையர்

மலைந்த பூவும்' (தொல், 1006: 4-5)

(2) கசப்பு - bitterness

'வேம்பின் பைங் காய் என் தோழி

தரினே, தேம் பூங் கட்டி என்றனிர்'

(குறு.196: 1-2)

(3) காவல்மரம் - totemic tree

'மோகூர் மன்னன் முரசம்

கொண்டு, நெடுமொழி பணித்து,

அவன் வேம்பு முதல் தடிந்து'

(பதி.44: 14-15)

(4) பாண்டியன் – sign of Pandya kings

'சினை அலர் வேம்பின்

பொருப்பன் பொருத' (கலி.92: 27)

(5) கடவுட்டன்மை - devine

'தெய்வம் சேர்ந்த பராரை

வேம்பில்' (அகம்.309: 4)

(6) பாதுகாப்பு - protection


277