பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேய்


'வேம்புசினை ஒடிப்பவும் காஞ்சி

பாடவும் .. .. .. .. எல்லா

மனையும் கல்என் றவ்வே'

(புறம்.296: 1-3)

(7) வெறுப்பு - hate

‘விருப்பிலார் இல்லத்து வேறிருந்

துண்ணும் வெருக்குக்கண்

வெங்கருனை வேம்பாம்' (நாலடி.

210: 1-2)

(8) தீமை - evil -

வேம்பின் இலையுட் கனியினும்

வாழைதன் தீஞ்சுவை யாதுந்

திரியாதாம்; ஆங்கே இனந்தீது

எனினும் இயல்புடையார் கேண்மை

மனந்தீதாம் பக்கம் அரிது' (நாலடி.

244)

(9) இழிவு, வருத்தம் - mean, affliction

'உயர்வரைத் தேனை உண்பார்

வருத்தும் காஞ்சிரமும் வேம்பும்

வாய்க்கொள்வார் யாவர்

சொல்லாய்' (சீவக.2722: 6-8)

வேய் Véy (bamboo)

(1) அழகு - beauty

நோயும் நெருஞ்சியும் வீடச்

சிறந்த வேய் வனப்புற்ற தோளை

நீயே ' (நற்.82: 1-2)

(2) உயர்ச்சி - lofty

'வெயில் முளி சோலைய, வேய்

உயர் சுரனே ' (ஐங்.327: 3)

(3) வளமை - fertile

'வேய் பயில் சோலை அருவி

தூர்த்தர' (பரி.11:23)

(4) திரட்சி - roundness

'வேய் எனத் திரண்ட தோள்'

(கலி.57: 1)

(ஆ) கழை

(5) விசைப்பு, எழுச்சி - force, arise

'கழைக் கண் இரும் பொறை ஏறி

விசைத்து எழுந்து' (நற்.95: 5)

(6) உயர்வு - lofty, high

'உறு கழை நிவப்பின் சிறு குடிப்

பெயரும்' (நற்.204: 10)

(ஒப்பு) Bamboo ஒழுக்கம்,

உள்ளார்ந்த நலம், சிறந்த பண்பு,

தகுதி, நன்மை, நேர்மை,

மகிழ்ச்சி ,

வேல்

வேர் Vér (root)

(1) மூலம், அடிப்படை, ஆசை

cause, base, desire

'அல்லற் பிறவி அகன்றோய் நீ

ஆசை வெவ்வேர றுத்தோய் நீ'

(நீலகேசி. 138: 1)

வேல் Vel (spear/javelin)

(1) வெற்றி - victory

'.. ... ... ... வென் வேல் தெறல் அருந்

தானைப் பொறையன்' (நற்.18: 4-5)

(2) வீரம் - valour / heroism

மறவர் வேல் என விரிந்த

கதுப்பின் தோல' (நற்.86: 1-2)

(3) கூர்மை - sharp

'செரு மிகு மொய்ம்பின் கூர்வேற்

காளையொடு' (நற்.184: 2)

(4) வலிமை – strength / skill

'வல் வேற் கட்டி நல் நாட்டு

உம்பர்' (குறு.11: 6)

(5) கொலை - killing

'கூற்றத் தன்ன கொலைவேல்

மறவர்' (குறு.283: 5)

(6) திறல், விறல், வெற்றி - strength,

bravery, triumph

'வெஞ்சின விறல் வேற்

காளையொடு' (ஐங்.391: 5)

(7) பாதுகாப்பு - defend / guard / protect

'விறல் வெய்யோன் ஊர் மயில்,

வேல் நிழல், நோக்கி' (பரி.8: 67)

(8) ஆற்றல் - power

'வேல் கெழு தடக்கைச் சால்

பெருஞ் செல்வ' (திருமுரு.265)

(9) வீரம், மீட்பு, கடவுட்டன்மை -

valour, save, divine

வீர வேல், தாரை வேல்,

விண்ணோர் சிறை மீட்ட தீர

வேல், செவ்வேள் திருக் கை வேல்,

வாரி குளித்த வேல், கொற்ற

வேல், சூர் மார்பும் குன்றும்

துளைத்த வேல் - உண்டே துணை'

(திருமுரு,தனிப்.3)

(10) அஞ்சாமை | அச்சமின்மை -

fearless, bold / courageous

'அஞ்சும் முகம் தோன்றின்,

ஆறுமுகம் தோன்றும்; வெஞ்

சமரில், அஞ்சல் என வேல்

தோன்றும்; நெஞ்சில் ஒரு கால்

நினைக்கின், இரு காலும்

278