பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வையை

வையை Vaiyai (a river)

(1) இனிமை - sweetness

'தமிழ் வையைத் தண்னம் புனல்'

(பரி.6: 60)

(2) அழகு - beauty

'... .. .. .. மாறு அட்ட தானையான்

வையை வனப்பு' (பரி.7: 49-50)

(3) மாண்பு - nobleness

சேண் இகந்து கல் ஊர்ந்த மாண்

இழை வையை' (பரி.11: 39)

(4) வளம் - fertile

'தொய்யா விழுச் சீர் வளம் கெழு

வையைக்கும்' (பரி.17: 44)

(5) பாண்டியன் - Pandya kings

'தென்னவன் வையைச் சிறப்பு'

(பரி.20: 97)

(6) மதுரை - the city on the banks of

the river

'காமரு வையை கடுகின்றே கூடல்'

(பரி.தி.2: 4)

(7) புரத்தல், பாதுகாத்தல் - nurture,

protect -

'உலகு புரந்தூட்டும் உயர்

பேரொழுக்கத்துப் புலவர் நாவில்

பொருந்திய பூங்கொடி வையை

என்ற பொய்யாக் குலக்கொடி'

(சிலப். 13: 165-167)

வைரம் (diamond) பார். வயிரம்

281