பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஞ்செழுத்து

யன்றே'(சீவக.1:223)

'நன்முற நின்மக னாம்நறு

மாலைகள் அன்னவ னால்அம

ரப்படும் தேவியர் நன்முளை

நின்மகன் ஆக்கம் அதாம்:எனப்

பின்னத னால்பயன் பேசலன்

விட்டான்'(சீவக.1:225)

(ஈ) அசோகு சாய்தல் Acoku

caytal (the Acoku tree falling)

தீமை,துன்பம் -evil,sorrow

'சீர்மலி அசோகு தன்கீழ் இருந்த

நம்தேவர் மேலே வேரொடு

சாய்ந்து வீழக் கண்டனம்'

(பெரிய.28.637)

அஞ்செழுத்து Anceluttu (five letters)

(1) துன்பம் களைதல்,பாகுபாடின்மை

-remove affliction,indiscriminate

'நல்லவர் தீயவர் எனாது நச்சினர்

செல்லல் கெடச்சிவ முத்து

காட்டுவ கொல்ல நமன்தமர்

கொண்டு போமிடத்து அல்லல்

கெடுப்பன அஞ்செழுத்துமே'

(திருஞான.தேவா.551)

(2) மந்திரம் -holy chant

'.. .. .. அரன் அஞ்செழுத்தும்

உணரா அறிவிலோர்' (பெரிய.1:

5.159)

(3) சிறப்பு -excellence

'ஓங்கிச் சிறந்த அஞ்செழுத்தும் '

(பெரிய.16:10)

(4) புகழ் -fame

'பன்னும் பெருமை அஞ்செழுத்தும்'

(பெரிய.16:12)

அட்ட புட்பம் Attaputpam (five

flowers)

(1) வழிபாடு, பண்புநலன் - worship,

virtue

'அட்ட புட்பம் அவை கொளுமாறு

கொண்டு அட்ட மூர்த்தி அனாதி

தன்பாலணைந்து அட்டுமாறு

'செய்கிற்ப அதிகை வீரட்டனார்

அடிசேரும் அவர்களே'

(திருநா.தேவா.155)

அட்டமி நாள் Attami nal (eighth day

of waning moon)

(1) சிறப்பு -special

அடி

'பண்ணார் பதினெண்

கணங்கள்தம் அட்டமிநாள்

கண்ணாரக் காணாதே போதியோ

பூம்பாவாய்'

(திருஞான.தேவா.3583:3-4)

அடி Ati (foot)

(1) அருள் / ஆதாரம் - grace/basis

'சாவா மரபின் அமர்க்காச்

சென்ற - .. .. .. நின் அடி தலை

உற வணங்கினேம்' (பரி.2:71-74)

(2) உய்தி / உய்வு - redemption

'மறுபிறப்பு அறுக்கும் மாசுஇல்

சேவடி'(பரி .3:2)

(3) அடைக்கலம் - refuge

'நின்அளந்து அறிதல் மன்உயிர்க்கு

அருமையின் நின்அடி உள்ளி

வந்தனென்' (திருமுரு.278-279)

(4) மாட்சி / மாண்பு,இறைமை -

glorious/dignity,divinity

'மலர்மிசை ஏகினான் மாணடி

சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார்'

(குறள்.3)

(5) பாதுகாப்பு, ஆதாரம் -

protection, basic

'குடி தழீஇக் கோல்ஓச்சும் மாநில

மன்னன் அடி தழீஇ நிற்கும்

உலகு'(குறள்.544)

(ஆ) அடிசேர்தல் Aticertal (reach

the feet)

(6) அடைக்கலம் - refuge

'இடு துனி கை ஆறா என், துயர்

கூரச் சுடும் , இறை: ஆற்றிசின்,

அடிசேர்ந்து! சாற்றுமின்'

(பரி. 8:78-79)

(7) பணிவு - humility

'மாண மறந்து உள்ளா நாணிலிக்கு

இப்போர் புறம் சாய்ந்து

காண்டைப்பாய் - நெஞ்சே!

உறழ்ந்து இவனைப் பொய்ப்ப

விடேஎம் என நெருங்கின்,

தப்பினேன் என்று அடி சார்தலும்

உண்டு!' (கலி. 89:12-15)

(8) தாபரமாகக் கொள்ளுதல் -

shelter

வேண்டுதல் வேண்டாமை

இலான்அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல' (குறள்.4)