பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடி

(9) பிறப்பு நீக்கம் - avoid birth /

salvation

'பிறவிப் பெருங்கடல் நீந்துவர்

நீந்தார் இறைவன் அடிசேரா தார்'

(குறள்.10)

(இ) அடிபொருந்துதல் Atiporuntatal

(reach the feet)

(10) பணிவு - humility

'வந்து அடி பொருந்தி முந்தை

நிற்பின், தண்டமும் தணிதி, நீ

பண்டையின் பெரிதே'

(புறம்.10:5-6)

(ஈ) அடி தொழுதல் Atitolutal

(worship the feet) (11) மதிப்பு,மரியாதை - honour,

respect

'அன்னை என நினைஇ , நின் அடி

தொழுதெனம்' (பரி.13:61)

(உ) அடி உறைதல் Ati uraital

(dwell at the feet)

(12) அருள் - grace

'அடி உறை அருளாமை ஒத்ததோ,

நினக்கு?' (கலி.54:4)

(13) அடிமை/பணிவு - slave / humility

'ஆடு கொள் வென்றி அடு போர்

அண்ணல் .. .. ... வாயில்

விடாது கோயில் புக்கு,எம்

பெருங் கோக் கிள்ளி கேட்க,

இரும் பிசிர் ஆந்தை அடியுறை

எனினே'(புறம்,67:1-12)

(14) சார்பு - dependant

'துளி நசைப் புள்ளின் நின் அளி

நசைக்கு இரங்கி , நின் அடி நிழல்

பழகிய அடியுறை'

(புறம்.198:25-26)

(ஊ) அடி வீழ்தல் Ati viltal (fall

at the feet)

(15) இரத்தல் beg

'அவன் நின் திருந்து அடிமேல்

வீழ்ந்து இரக்கும், நோய்தீர்க்கும்

மருந்து நீ ஆகுதலான்'

(கலி.63:10-11)

(எ) அடிபணிதல் Atipanithal (pay

obeisance to the feet)

அடி

(16) அடைக்கலம் / பணிவு - refuge/

humbleness

'என்னை நீ செய்யினும்

உரைத்தீ வார் இல்வழி, முன்

அடிப் பணிந்து, எம்மை

உணர்த்திய வருதிமன்'

(கலி.73:14-15)

(ஏ) அடி தொடுதல்} Ati totutal

(touch the feet)

(17) வணங்குதல் - bow down

'ஐய! சூளின், அடி தொடு

குன்றொடு வையைக்குத் தக்க

மணல் சீர் சூள் கூறல்!'

(பரி.8: 70-71)

(ஐ) அடி நோக்குதல் Ati nokkutal

(look at the feet)

(18) நாணம் - shyness

'தொடி நோக்கி மென்தோளும்

நோக்கி அடிநோக்கி அஃதுஆண்டு

அவள்செய் தது' (குறள்.1279)

(ஒ) ஏழடிப் பின் செல்லுதல்

Elatip pin cellutal (going along seven

steps)

(19) மதிப்பு / சிறப்பு -

honour/excellence

'காலின் ஏழ் அடிப் பின் சென்று'

(பொரு. 166)

(ஓ) தாள் Tal (foot)

(20) அருள் - grace

'நின்னின் சிறந்த நின் தாள்

இணையவை' {பரி.4:62)

(21) முயற்சி - effort

'ஆள் இல் பெண்டிர் தாளின்

செய்த நுணங்கு நுண் பனுவல்

போல' (நற்.353:1-2)

(22) செயல்திறம் - efficiency

'தொடங்கு வினை தவிரா,அசைவு

இல் நோன் தாள்'(அகம்.29:1)

(23) உழைப்பு - hard work

'தாளாற்றித் தந்த பொருளெல்லாம்

தக்கார்க்கு வேளாண்மை செய்தற்

பொருட்டு' (குறள்.212)

(ஒள) தாள் தொழுதல் Tal tolutal

(worship the feet)