பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடி


(24) இறைமை - divinity

'தாள் தொழு தண் பரங்குன்று'

(பரி.8:82)

(25) பணிவு - humility

'கற்றதனா லாய பயனென்கொல்

வாலறிவன் நற்றாள் தொழாஅர்

எனின்' (குறள்.2)

(க) தாள் சேர்தல் Tal certal (reach

the feet)

(26) அடைக்கலம் - refuge

'தனக்குஉவமை இல்லாதான்தாள்

சேர்ந்தார்க்கு அல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது'

(குறள்.7)

(ங) தாள் வணங்குதல் Tal

vanankutal(bowing at the feet)

(27) பணிவு - humbleness

'கோளில் பொறியில் குணமிலவே

எண்குணத்தான் தாளை

வணங்காத் தலை' (குறள்.9)

(ச) சேவடி Cevati (foot)

(28) கடவுட்டன்மை - diivinity

'தாமரை புரையும் காமர் சேவடி

(குறு.கட.வா:`1)

(29) தூய்மை - purity

'மறுபிறப்பு அறுக்கும் மாசுஇல்

சேவடி (பரி.3:2)

(ஞ) இறையவன் இணையடி

Iraivan inaiyati

(30) வினைத்துன்ப நீக்கம் - removal of

karma

'வினையிருள் அடுவன விரிகதிர்

இயல்பொடு கனையிருள் கடிவன

கடுநவை அடுவன மனையிருள்

நெறிபெற மதிகெட அடைவன

வினையமெய் இறையவன்

இணையடி இவையே'

(நீலகேசி.455)

(ட) பாதம் அணைதல் Patam

anaital

அடைக்கலம்

மெல்லல் இல்லாப் பெரியோய்

நின் இணையில் பாதம்

அணைவல் யான்' (நீலகேசி.136:4)


அணங்கு


(ண) பாதம் தொழுதல் Patam

tolutal)

பணிவு

'சொல்லற் கரிய பெரியோய் நின்

தோமில் பாதம் தொழுவல் யான்'

(நீலகேசி.138:4)

(ஒப்பு) Feet, அடிப்படை, அடிமை

நிலை,ஒப்படைப்பு, வாழ்க்கை

ஆதாரம்.

அடிமை Atimai (slave)

(1) அஃறினை - non-human

'குடிமை ஆண்மை இளமை மூப்பே

அடிமை வன்மை விருந்தே குழுவே

.. .. .. முன்னத்தின் உணரும்

கிளவி எல்லாம் உயர்திணை

மருங்கின் நிலையின ஆயினும்

அஃறினை மருங்கின் கிளந்தாங்கு

இயலும்' (தொல்.540)



(2) செயலின்மை - actionless

மடிமை குடிமைக்கண் தங்கின்தன்

ஒன்னார்க்கு அடிமை புகுத்தி

விடும்' (குறள்.608)

அடும்பு Atumpu (a plant)

(1) இரங்கல் - pine

'படிவ மகளிர் கொடி கொய்து

அழித்த பொம்மல் அடும்பின்

வெண் மணல் ஒரு சிறை'

(நற்.272:2-3)

(2) தலைவி - heroine

'அடும்பு அவிழ் மணிமலர்

சிதைஇய மீன் அருந்தி தடந்தாள்

நாரை இருக்கும் எக்கர்'

(குறு.349:1-2)

அண்டிரன் Antiran( a liberal chief)

(1) வண்மை - liberality

'மழைக் கணம் சேக்கும் மா மலைக்

கிழவன் , வழைப் பூங் கண்ணி

வாய் வாள் அண்டிரன்'

(புறம்.131:1-2)

அணங்கு Ananku (a deity)

(1) அச்சம் - fear