பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனல்

'அணங்கே விலங்கே ..கள்வர்தம்

இறைஎனப் பிணங்கல் சாலா

அச்சம் நான்கே' (தொல்.1202)

(2) வலிமை - strength

'கடுந்திறல் அணங்கின்

நெடும்பொருங் குன்றத்து'

(அகம்.378 :22)

அணல் Anal (moustache / beard)

(1) ஆண்மை, ஆளுமை, வீரம் -

manliness,headship,bravery

'அடி புனை தொடுகழல்,மை

அணல் காளை' (புறம்.83:1)

அணிலாடு முன்றில் Anilatu munril

(squirrel in the courtyard)

(1) பொலிவின்மை, தனிமை -

desolateம lonely

'மக்கள் போகிய அணில் ஆடு

முன்றிற் புலப்பில் போலப்

புல்லென்று அலப்பென்'

(குறு.41:4-5)

அணு Anu (atom)

(1) சிறுமை / நுண்மை - small,

minute

'அணு எனச் சிறியது ஆங்கு ஓர்

ஆக்கையும் உடையன் ஆனான்'

(கம்ப.யுத்.2128:4)

அணை Anai (bed)

(1) உறக்கம், இன்னலக்காப்பு,

மென்மை' - sleep,safety,soft

'வெறி உற விரிந்த அறுவை மெல்

அணைப் புனிறு நாறு

செவிலியோடு புதல்வன் துஞ்ச'

(நற்:40:5-6)

(ஆ) கூந்தல் அணை kuntal anai

(hair bed)

(2) காம இன்பம், மென்மை -

passion,softness

'இரும் பல் கூந்தல் மெல் அணை

ஒழிய' (நற்.366:7)

(இ) அரவணை Aravanai (snake

bed)

(3) ஆதாரம்,இருக்கை - basis,seat

அணை



'பாடு  : இமிழ் பரப்பகத்து

அரவணை அசைஇய'

(கலி.105:71)

(ஈ) பாப்பணை Pappanai (snake

bed)

(4) இறையிருப்பு - divine presence

'பாப்பணைப் பள்ளி அமர்ந்தோன்

ஆங்கண்' (பெரும்.373)

(உ) சேக்கை Cekkai (bed)

(5) இருப்பிடம் / இருக்கை - seat

'தன் உரு உறழும் பாற்கடல்

நாப்பண், மின் அவிர் சுடர் மணி

ஆயிரம் விரித்த கவை நா அருந்

தலைக் காண்பின் சேக்கைத்

துளவம் சூடிய அறிதுயிலோனும்'

(பரி.13:26-29)

(6) காம இன்பம் / வேட்கை -

passion/desire

'மாசு இல் வண் சேக்கை மணந்த

புணர்ச்சியுள்' (கலி.24:6-7)

(7) மென்மை - soft

'இலங்குமாண் அவிர்தூவி அன்ன

மென்சேக்கையுள்' (கலி.13:15)

(8) காதல், வளமை - love,

prosperity

'பல்படை நிவந்த வறுமையில்

சேக்கை,பருகு வன்ன காதலொடு

திருகி' (அகம்.305:5-6)

(9) உறக்கம் / இன்பம் துய்த்தல் -

sleep,having pieasure

'ஆய்தொடி மகளிர் நறுந்தோள்

புணர்ந்து,கோதையின் பொலிந்த

சேக்கைத் துஞ்சி' (மது.712-713)

(ஊ) வரி அதள் சேக்கை Vari

atal cekkai (tiger skin bed)

(10) உயர்வு - esteem

'காடு தேர் வேட்டத்து விளிவு

இடம் பெறாஅது,வரி அதள்

படுத்த சேக்கை' (அகம்.58:3-4)

(எ) பள்ளி Palli(bed)

(11) ஆழ்ந்த சிந்தனை / உறக்கமின்மை

-deep thought, sleeplessness

'எழினி வாங்கிய ஈர்அறைப்

பள்ளியுள் .. .. மண்டு அமர்

நசையொடு கண்படை பெறாஅது'

(முல்.64-67)