பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணை

(25) காம இன்பம், இணைவு

pleasure, joining

'காமக் கணிச்சியால் கையறவு

வட்டித்து, சேமத் திரை வீழ்த்துச்

சென்று,அமளி சேர்குவோர்'

(பரி.10:33-34)

(26) உறக்கம்,ஓய்வு - sleep,rest

'அமளித் துஞ்சும் அழகுடை

நல்இல்' (பெரும்.252)

(ட) பாய் Pay (mat)

(27) உறக்கம் - sleep

'முன்றில் கிடந்த பெருங்

களியாற்கு அதள் உண்டாயினும், .. .. ..

யார்க்கும் ஈய்ந்து, துயில்

ஏற்பினனே' (புறம்.317:2-3,7)

(ண) ஆயிரம் தலையுடை பாயல்

Ayiram talaiiyutai payal

(28) வலிமை / திறல் - strength,

ability

'ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறல் பாயல் பள்ளிப் பலர் தொழுதேத்த' (சிலப்.11:37-38)

(த) நாக அணை Naka anai

(29) திருமால்

'நாற்ற மலர்மேல் அயனும்

நாகத்தில் ஆற்றல் அணைமேல்

அவனும் காண்கிலா'

(திருஞான.தேவா.31:1-2)

(ந) பஞ்சணை Pancanai

(30) காம இன்பம்

'நேசனைக் காணா இடத்தில்

நெஞ்சாரவே துதித்தல் ஆசானை

எவ்விடத்தும் அப்படியே வாச

மனையாளைப் பஞ்சணையில்'

(தனிப்.59:1-3)

(ப) பூவணை Puvanaai

இன்பம்

'அரிப்பறை அனுங்க ஆர்க்கும்

மேகலைக் குரலோடு ஈண்டிப்

புரிக்குழல் புலம்ப வைகிப்

பூவணை விடுக்கலானே'

(சீவக.2082:3-4)


அணையை விட்ட..

(ம) பூளை அணை Pulai anai

மென்மை

'பூளை மெல்லணை மேல் புரளும்

கோலோ' (சீவக.1628: 4)

(ய) பொன் திகழ் கட்டில் Pon

tikal kattil

(31) அரசத்தன்மை - royalty

'பொன் திகழ் பள்ளிக் கட்டில்

புரவலன் துயில மாடே'

(பெரிய. 476:5-6)

(ர) பொங்கணை (படுக்கை)

Ponkanai

இன்பம் - pleasure

'பூவுக இளையவர் திளைத்த

பொங்கணைப் பாவுசெந்

துகிலிடைப் பள்ளி போலுமே'

(சூளா.756:3- 4)

(ல) மலர்ப்பள்ளி Malarppalli

மென்மை

'மெய்யனை திரையின் வேலை

மென்மலர்ப் பள்ளி ஆன'

(கம்ப.யுத்.888:3)

(ஒப்பு) Bed, Pillow, Couch

அன்பு,ஆடம்பரம்,ஆழ்

சிந்தனை, இரகசியம், உறக்கம்,

ஓய்வு, கடவுளின் நிறை தன்மை,

தகுதி, திருமணம்,நடுநிலைமை,

பிரதிபலிப்பு,பிறப்பு,வளமை ;

இறப்பு, உடல் நலக்கேடு ,

கடுந்துயரம், காதல் துயரம்;

இணைந்து வாழ்தல்.

அணை (dam) பார். 'கற்சிறை'

அணையை விட்ட உரவுநீர் வெள்ளம்

Anaiyai vitta uravunir vellam (dam water flooding)

(1) களிப்பு, வேகம் -joy,speed

'இரவுதான் பகலாய்த் தோன்ற

எதிரெழுந்தணையை - விட்ட

உரவுநீர் வெள்ளம் போல ஓங்கிய

களிப்பில் சென்றார்' (பெரிய.3509:

5- 8)