பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிரல்

'வழி மயக்குற்று, மருடல்

நெடியான்' (பரி.தி.13:5)

(18) பிறப்பு, வாழ்க்கை - birth, life

'வீழ்நாள் படாஅமை

நன்றுஆற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழி அடைக்கும் கல்'

(குறள்.38)

(ஏ) புது வழிப்படுத்தல் Putu

valippatuttal (find new way)

(19) அறிவாற்றல் - efficient knoowledge

'சேயாறு செல்வோம் ஆயின், இடர்

இன்று களைகலம் காமம்,

பெருந்தோட்கு என்று,

நன்றுபுரிந்து எண்ணிய மனத்தை

ஆகி முரம்புகண் உடைய ஏகி,

கரம்பைப் புதுவழிப் படுத்த

மதியுடை வலவோய்!'

(குறு.400:1-5)

அதிரல் Atiral (wild jasmine)

(1) இளவேனில் - spring

முதிரா வேனில் எதிரிய அதிரல்'

(நற்.337:3)

(2) இரவு - night

'எல்லி மலர்ந்த பைங்கொடி அதிரல்' (அகம்.157:6)

(3) போர் / வீரம் - war/bravery

'கொய்குழை அதிரல் வைகுபுலர்

அலரி சுரிஇரும் பித்தை

சுரும்புபடச் சூடி' (அகம்.215:4-5)

(4) இன்பம் - pleasure

'நன்முகை அதிரல் போதொடு,

குவளைத் தண்நறுங் கமழ்தொடை

வேய்ந்த, நின் மண்ஆர் கூந்தல்

மரீஇய துயிலே' (அகம்.223:14-16)

(5) பலி / தியாகம், அழிவு -

sacrifice, destruction

'உயர்பதுக்கு இவர்ந்த ததர்கொடி

அதிரல் நெடுநிலை நடுகல்

நாட்பலிக் கூட்டும்' (அகம்.289:2-3)

அந்தரத்து எழுதிய எழுத்து Antarattu

elutiya eluttu (letter written in the sky)

(1) இன்மை - nothingness, negation,

non-existance

'அந்தரத்து எழுதிய எழுத்தின்

மான வந்த குற்றம் வழிகெட

ஒழுகலும்' (தோல்.1092:20-21)


அமரர்



அம்பறாத்தூணி (quiver) பார்.

'தொடை'


அம்பி (boat) பார். 'நாவாய்'

அம்பு (arrow) பார். 'தொடை'

அமணர் நற்குணங்களிலிருந்து

தீக்குணத்தவராதல் Amanar

narkunankaliliruntu tikkunattavaratal

(1) தீமை,அழிவு - evil, destruction

'முந்தைய உரையில் கொண்ட

பொறைமுதல் வைப்பும் விட்டுச்

சிந்தையில் செற்றம் முன்னாம்

தீக்குணத் தலை நின்றார்கள்'

(பெரிய.2537:5-8)

அமணர் தம்மில் மாறுபாடு கொண்டு

ஊறு செய்தல் Amanar tammil marupatu

kontu uru ceytal

(1) தீமை, அழிவு - evil, destruction

'வந்தவாறு அமணர் தம்மில்

மாறுகொண்டு ஊறுசெய்ய'

(பெரிய.2537:3-4)

அமணர் தமக்குத் தாமே சினந்து

கலகம் செய்தல் Amanar tamakkut tame

cinantu kalakam ceytal

(1) தீமை, அழிவு - evil,destruction

'கந்தியர் தம்மில் தாமே

கனன்றெழு கலாங்கள் கொள்ள'

(பெரிய.2537:1-2)

அமரர் Amarar (devas)

(1) இறவாமை - immortality

'சாவா மரபின் அமரர்க்காச்

சென்றநின்' (பரி.2:71)

(2) சிறப்பு - greatness

'அரிது அமர் சிறப்பின் அமரர்

செல்வன்' (பரி.5:51)

(3) வீரம் - valour

'பெருவிறல் அமரர்க்கு வென்றி

தந்த' (புறம்.55:3)

(4) புகழ் - fame

'செல்லா நல்லிசை அமரர்

காப்பின்' (பட்.184)