பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமுதம்/அமுது

ஏந்தொத் தலர்ந்த முலையின்

அமிர்தன்ன - சாயல் வேந்தற்கு

அமுதாய் விளையாடுதற்கு

ஏதுவாமே' (சீவக.பதிகம்.8:3-4)

(ஆ) அமுது உண்ணல் Amutu

unnal (to eat ambrosia)

(5) நிலைபேறு, நீண்டநாள் வாழ்வு -

stability, long life

'அமுதம் உண்க, நம் அயல்

இலாட்டி' (நற்.65:1)

(6) செல்வம் - wealth

'இசையின் கொண்டான், நசை

அமுது உண்க என'(புறம்.399:21)

(7) இறவாமை - immortality

'விண்ணோர் அமுதுண்டும் சாவ

ஒருவரும்' (சிலப்.12:22)

(இ) அமிழ்து / அமிழ்தம்

Amiltu/Amiltam (ambrosia)

(8) இனிமை - sweet

'அமிழ்து பொதி செந் நா'

(குறு.14:1)

(9) பெறர்கருமை - rare

'அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதம்

ஆக' (குறு.83:1)

(10) நீர் - water

'அமிழ்து திகழ் கருவிய கணமழை

தலைஇ' (பதி.17:12)

உப்பு, உயிர் - salt, life

'கடல் விளை அமிழ்தின் கணம்

சால் உமணர்' (அகம்.169:6)

(11) இன்பம் - pleasure

'அமிழ்தத் தன்ன கமழ்தார்

மார்பின்' (அகம்.332:13)

(12) மழை - rain

'வான் நின்று உலகம் வழங்கி

வருதலால் தான் அமிழ்தம்

என்றுணரற் பாற்று' (குறள்.11)

(13) உணவு - food

'செம்முது செவிலியர் கைம்முதல்

தழீஇய சாலி வாலவிழ் பாலொடு

கலந்த தமனிய வள்ளத்து

அமிழ்தம் அயிலாள்'

(பெருங்.உஞ்.54:25-27)

(14) பால் - milk

'அம்பொன் வள்ளத்து

அமிழ்துபொதி அடிசில்'

(பெருங்.உஞ்.46:294)

(15) அருள் - grace

அமுதம்/அமுது



'பொருது போந்துலாம் போதரித்

தடங்கண் அமிழ்து சேர்ந்தன

அகஇதழ் நாண் இறக்கமொடு'

(பெருங்.இலா.3:99-100)

(ஈ) அமிர்து / அமிர்தம் Amirtu/

Amirtam

(16) இனிமை - pleasure

'அமிர்து பொதி துவர்வாஅய்'

(பதி.16:12)

இறவாமை - immortality

'வாயடை அமிர்தம் நின்

மனத்தகத்து அடைத்தர, மூவா

மரபும் ஓவா நோன்மையும் சாவா

மரபின் அமரர்க்காச் சென்ற நின்'

(பரி.2:69-71)

(17) இன்பம், உவகை - pleasure

'அரிவையர் அமிர்த பானம்

உரிமை மாக்கள் உவகை அமிர்து

உய்ப்ப' (பரி.8 :120-121)

(18) காம இன்பம் - pleasure

'சென்னித் தாமத்துப் பன்மலர்த்

தாதுக இரந்துபின் எய்தும்

இன்சுவை அமிர்தம் புணரக்

கூடின் போகமும் இனிதென'

(பெருங்.இலா.7:89-91)

(19) சொல்லினிமை - sweet words

'எடுத்தனன் தழீஇ இன்னுரை

அமிர்தம் கொடித்தேர்த் தானைக்

கோமான் கூறி' (பெருங்.மகத.26:

88-89)

(20) ஊடல் - sulking

'தணப்பில் வேட்கை தலைத்தலை

சிறப்ப உணர்ப்புள்ளுருத்த ஊடல்

அமிர்த்தது' (பெருங்.இலா.11:20-21)

(21) அறம் - virtue

புழுகுருக மெய்காட்டிப்

பொல்லாத போக்கி அழகுருவு

கொண்டாள் அற அமிர்தம்

உண்டாள்' (நீலகேசி.133:3-4)

(22) குணமாலை - acharacter in the epic

Civaka cintamani

'விண்ணோர் உலகின்னொடு

மிந்நிலத்து இல்லாப் பெண்ணார்

அமிர்தே அவன் பெற்ற அமிர்தே'

(சீவக.4:1065.3-4)

(உ) அங்கணத்துள் உக்க அமிழ்து

(23) வீண் / பயனின்மை