பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயிர்

'அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்

தங்கணத்தார் அல்லார்முன்

கோட்டி கொளல்'(குறள்.720)

(ஊ) புல்லிடை உகுத்த அமுது

வீண் / பயனின்மை

'கல்வியும் இளமையும் கணக்கு இல்

ஆற்றலும் வில் வினை உரிமையும்

அழகும் வீரமும் எல்லை இல்

குணங்களும் பரதற்கு எய்திய

புல்லிடை உகுத்த அமுது

ஏயும்போல் என்றாள்'

(கம்ப.அயோ.155)

(ஊ) மூவா மருந்து Muva maruntu

(24) முதுமையின்மை

'மூவா மருந்தின் முன்னர்த்

தோன்றலின்' (சிலப்.2:46)

(ஒப்பு) Ambrosia நிலைபேறு

அயிர் Ayir (incense)

(1) வெண்மை - white

'குடதிசை மருங்கின் வெள்ளயிர்

தன்னொடு' (சிலப்.4:35)

அயிராணி Ayirani (wife of Indiran)

(1) கற்பு, புகழ் - chastity, fame

'அரும்பெறல் கற்பின் அயிராணி

அன்ன பெரும்பெயர்ப் பெண்டிர்

எனினும்' (நாலடி.381:1-2)

அயிரை Ayirai (a small fish)

(1) தலைவி - heroine

'குண கடற் திரையது பறைதபு

நாரை .. .. .. அயிரை ஆர்

இரைக்கு அணவந்தாஅங்குச்

சேயள் அறியோட் படர்தி'

(குறு.128:1-4)

(2) சிறிய அளவு - small

'சிறிய பொருள்கொடுத்துச் செய்த

வினையால் பெரிய பொருள்கருது

வாரே - விரிபூ விராஅம் புனலூர

வேண்டயிரை விட்டு வராஆல்

வாங்கு பவர்' (பழமொழி.372)

அரக்கர் (Asura) பார். 'அவுணர்'


அரம்

அரக்கு Arakku(shellac)

(1) சிவப்பு நிறம் - red colour

"அவ் வளை வெரிநின் அரக்கு

ஈர்த்தன்ன செவ் வரி இதழ சேண்

நாறு பிடவின்' (நற்.25:1-2)

(2) மென்மை, அழிவு - tender

'மெல் அரக்கின் உருகிஉக

வெந்தழாயில் வேய்கேனோ'

(கம்ப.சுந்.324:4 8)

அரக்கு இல் Arakku il (wax house)

(1) அழிவு - destruction

'குரைத்துக் கொளப்பட்டார்

கோளிழுக்குப் பட்டுப்

புரைத்தெழுந்து போகினும்

போவர் - அரக்கில்லுள் பொய்யற்ற

ஐவரும் போயினார் இல்லையே

உய்வதற் குய்யா விடம்'

(பழமொழி.234)

(2) பொய்ம்மை - deceiving

'ஒட்டாக் கிளைஞரை நட்பினுள்

கெழீஇய ஐயிரு பதின்மர்

அரக்கின் இயற்றிய பொய் இல்

அன்ன பொறியிவன் புணர்க்கும்'

(பெருங்.உஞ்.33:8-10)

(ஆ) அரக்கு இல் எரி சூழ்தல்

Arakku il eri cultal (burning of the wax

house)

(3) அழிவு, சூழ்ச்சி - destruction,

intrigue

'ஐவர் என்று உலகு ஏத்தும்

அரசர்கள் அகத்தரா, கைபுனை

அரக்கு இல்லைக் கதழ் எரி

சூழ்ந்தாங்கு' (கலி.25:1-2)

அரசமரம் (pipal tree) பார். 'அரை

மரம்'

அரசன் {king) பார். 'இறை'

அரண் (fort) பார். 'எயில்'

அரம் Aram (saw)

(1) இடையூறு / தடை, திண்மை

obstruction, firmness

'கடுமொழியும் கைஇகந்த

தண்டமும் வேந்தன் அடுமுரண்

தேய்க்கும் அரம்' (குறள்.567)