பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரிமா

'பொரு கரியொடு சின அரியிடை'

(பெரிய.10.82)

(11) கம்பீரம்

"ஆளர் ஐவர் தமைத்தோய்ந்த

கற்புடைய பாஞ்சாலி அணைந்த

வீமன் வாள் அரிபோல்

அருகிருக்க மலய வெற்பில்'

(தனிப்.484:3-5)

(ஊ) அரிக்குருளை Arikkurulai

(12) சிறப்பு, புகழ் - greatness, fame

'சிறந்த நல்தவத்தால் தேவி

திருமணி வயிற்றின் மைந்தன்

பிறந்தனன் உலகம் போற்றப் பேர்

அரிக்குருளை அன்னான்'

(பெரிய.1:3.17)

(எ) அரியேறு Ariyeru

(13) எழுச்சி - rise, active

'ஆர்கொல்பொர அழைத்தார்

என்று அரியேற்றில் கிளர்ந்து

(பெரிய.9.11)

(14) ஆற்றல் - strong,powerful

'செங்கண்வயக் கோளரியேறு

அன்ன திண்மைத் திண்ணார்'

(பெரிய.10.56)

(ஏ) சீயம் Ciyam

வலிமை, மிகுசினம் - strength,

anger

'சேண் உயர் கொடிய வய வெஞ்

சீயமால்' (கம்ப.யுத்.1322:2)

(15) உயர்வு, மேன்மை

'நீ தரக் கொள்வேன் யானே

இதற்கு இனி நிகர் வேறு

எண்ணின் நாய் தரக் கொள்ளும்

சீயம் நல் அரசு என்று நக்கான்'

(கம்ப.யுத்.943:3-4)

(ஐ) சீயக்கொடி Ciyakkoti

(16) வெற்றி - victory

'வீணை என்று உணரின் அஃது

அன்று விண் தொடும் சேண் உயர்

கொடியது வய வெஞ் சீயமால்'

(கம்ப.யுத்.1322:1-2)

(ஒ) சிங்கம் Cinkam

(17) பெருமை - proud

அருந்ததி



'சிங்கம் அனையார் திருமுடியின்

மேற்குவித்த'(பெரிய.28.172)

தலைமை - headship

'திடமுக் கடவா ரணமுகைத்த

தேவே தேவ சிங்கமே' (தனிப்.478:

13-14)

(18) வெற்றி - victory

'திருந்தலரி கலையடக்குங்

கிளுவைமரு தப்பசெய சிங்கம்

என்னை' (தனிப்.722:1-2)

(19) பேராற்றல் - strong,powerful

'தீ ரசந்தி ரகாவி யிடக்கயா

சிங்கவுத்தண்ட தூர்த் தாண்ட

னேரண' (தனிப்.738:5-6)

(ஒப்பு) Lion அரச மேன்மை,

ஆண்மை, ஆரோக்கியம்,

ஆற்றல், காலம், கிறித்து,

தலைமை,தூய்மை, நடுநிலைமை,

நன்றி, பரிவு, பலம், பாதுகாப்பு,

புகழ், பூமி, பெருந்தகைமை,

மீட்பு, வலிமை, வளமை,

விழிப்புணர்வு, வெற்றி; ஆபத்து,

இறப்பு, உணர்ச்சிவேகம்,

கடுஞ்சீற்றம், காட்டியல்பு,

கீழுலகம், கொடுஞ்செயல்,

செருக்கு, பாலியல், பேராசை;

தீமையை விரட்டுதல்.

அருகம்புல் (cynodon grass) பார்.

'அறுகை'

அருங்கலம் Arunkalam (crown)

(1) அரசமைதி - royalty

'அருங்கலம் உலகின் மிக்க

அரசர்க்கே உரிய அன்றிப்

பெருங்கலம் உடையரேனும்

பிறர்க்கவை பேசலாகா'

(சூளா.1015:1-2)

அருந்ததி Aruntati (a star)

(1) கற்பு - chastity

'அருந்ததி அனைய கற்பின்'

(ஐங்.442:4)

(ஆ) செம்மீன் Cemmin

(2) சிறப்பு -greatness

'விசும்பு வழங்கு மகளிருள்ளும்

சிறந்த செம்மீன் அனையன்'