பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருவி

(2) மிகுதி, பெருக்கம் - excess,

increase

'நயம் பெரிது உடைமையின்

தாங்கல் செல்லாது, கண்ணீர்

அருவியாக அழுமே, தோழி!'

(நற்.88:7-9)

(3) தூய்மைப்படுத்தல் - purification

'கல் மிசை அருவியின் கழூஉஞ்

சாரல்' (நற்.151:4)

(4) விரைவு - speed

'குன்றுஇழி அருவியின் வெண்தேர்

முடுக'(குறு.189:2)

(5) தூய்மை - pure

' .. .. ... பாம்பின் தூங்குதோல்

கடுக்கும் தூவெள் அருவி'

(குறு.235:1-2)

(6) வளமை - prosperous

'மைபடு சிலம்பின் ஐவனம் வித்தி

அருவியின் விளைக்கும்

நாடனொடு' (குறு.371:2-3)

(7) உயர்வு - high

'மாஅல் அருவித் தண் பெருஞ்

சிலம்ப!' (ஐங்.238:3)

(8) அழகு - beauty

'வாள் வனப்பு உற்ற அருவி'

(ஐங்.312:3)

(9) அசைவு, இயக்கம் - movement,

action

'வரை மிசை இழிதரும்

அருவியின் மாடத்து வளி முனை

அவிர்வரும் கொடி நுடங்கு

தெருவில்' (பதி.47:3-4)

(10) வளம் - wealth

'நெறி நீர்அருவி அசும்பு உறு

செல்வம்' (பரி.8:128)

(11) தன்மை - cool

'காதலர் - எயிறு ஏய்க்கும் தண்

அருவி நறு முல்லை' (கலி.32:16)

(12) உயர்வு / சிறப்பு - high /

excellence

'இலங்கும் அருவித்து: இலங்கும்

அருவித்தே : வானின் இலங்கும்

அருவித்தே' (கலி.41:18-19)

(ஆ) அருவி ஒலித்தல் Aruvi

olittal (resounding waterfall)

(13) மகிழ்தல் - enjoyable

'நெடு நீர் அருவிய கடும் பாட்டு

ஆங்கண்: பிணி முதல் அரைய

பெருங் கல் வாழைக் கொழு முதல்


அலவனை அன்னம் அருளல்

ஆய் கனி மந்தி கவரும் நல் மலை

நாடனை நயவா,யாம்,அவன் நனி

பேர் அன்பின், நின் குரல் ஒப்பி,

நிற் புறங்காத்தலும் காண்போய்,

நீ?' (நற்.251:1-6)

(இ) அருவியாடுதல் Aruviyatutal

(bathe in the waterfall)

(14) இன்பம், இனிமை, மகிழ்ச்சி -

pleasure, sweetness, happyness

'ஆர்கலி வெற்பன் மார்பு

புணைஆக, கோடுஉயர்

நெடுவரைக் கவாஅன் பகலே,

பாடுஇன் அருவி ஆடுதல் இனிதே'

(குறு.353:1-3)

(15) புத்துணர்ச்சி - freshness

'விண் தோய் வரை, பந்து எறிந்த

அயா வீட, தண் தாழ் அருவி,

அரமகளிர் ஆடுபவே'

(கலி.40:22-23)

(ஒப்பு) Waterfall தொடர்

இயக்கநிலை: நிலையாமை.

அரைத்த மஞ்சள் Araitta mancal

(1) அழிதல் - perish

'நரைப்பு மூப்பொடு பிணிவரும்

இன்னே நன்றி இவ்வினையே

துணிந்து எய்த்தேன் அரைத்த

மஞ்சள் அதாவதை அறிந்தேன்

அஞ்சினேன் நமரானவர் தம்மை'

(சுந்.தேவா.185:1-4)

மே.காண். 'மஞ்சள்'

அரைமரம் Araimaram(pipal tree)

(1) பௌத்த சமயம் - Buddhism

'முழுத்தாளதாய்ப் பள்ளி

முற்றத்தோர் அரைமரத்தின்

குழுக்கொம்பர் பிடித்தொருகாற்

குஞ்சித்து நின்றுதான்'

(நீலகேசி.269:3-4)

அலவன் (crab) பார். 'களவன்'

அலவன் அன்னம் அருளல்

Alavanai annam arulal

(1) நன்மை - goodness