பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலை

'ஓடும் திரைகள் உதைப்ப

உருண்டுருண்டாடும் அலவனை

அன்னம் அருள்செய நீடிய

நெய்தலம் கானல் நெடுந்தகை

வாடி இருந்தான் வருங்கல

நோக்கா' (சீவக.516)

அலை (wave) பார். 'திரை'

அவரை பூத்தல் Avarai puttal

(flowering of avarai - a bean)

(1) எதிர்பார்ப்பு, பனிக்காலம் - hope,

winter

கொழுங்கொடி அவரை பூக்கும்

அரும்பனி அச்சிரம் வாரா தோரே'

(குறு.82:5-6)

அவல் Aval (ditch,valley)

(1) தாழ்ச்சி, இழிநிலை - degradation

'சகடம் பண்டம் பெரிது

பெய்தன்றே; அவல் இழியினும் ,

மிசை ஏறினும் அவணது அறியுநர்

யார்?' (புறம்:102:2-5)

அவீசி Avici (a city)

(1) தீமை - evil

'வீய்ந்தது இன்மையின் வெய்ய

அவீசிதான் காந்தி பாலி இரங்கக்

கலகனைப் போழ்ந்து கோடல்

பொருந்தலது ஒக்குமே'

(நீலகேசி.546:2-4)

அவுணர் Avunar (asura)

(1) கொடுமை, கொலை, மாயம்

cruelty, murder, illusion

'கொன்று உணல் அஞ்சாக்

கொடுவினைக் கொல்தகை மாய

அவுணர் மருங்கு அறத் தபுத்த

வேல்' (பரி.5:6-7)

(ஆ) அரக்கர் Arakkar

(2) கொடுமை / வன்மை - cruelty

'வல் அரக்கரின் மால் வரை போய்

விழுந்து' (கம்ப.அயோ.511:1)

(3) துன்பம் - sorrow

'வேதனை அரக்கர் ஒரு மாயை

விளைவித்தார்' (கம்ப.கிட்.864:1)


அளை

(4) ஆற்றல் / வலிமை - power,

strength

'திண் திரள் அரக்கர்தம் செருக்குச்

சிந்துவான்' (கம்ப.சுந்.1057:1)

அழல் பட்ட புண்ணில் அருவி

ஆரம் படுதல் Alal patta punnil aruvi

aram patutal

(1) துன்பம் நீங்குதல் - relief

'கட்டழல் கதிய புண்ணில்

கருவரை அருவி ஆரம் பட்டது

போன்று நாய்கன் பரிவுதீர்ந்து

இனியர் சூழ ' (சீவக.583:1-2)

அளை Alai (cave)

(1) பாதுகாப்பு - safety

'எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்

எருத்தின் செய்யும் மேவல் சிறுகட்

பன்றி .. .. .. பாங்கர்ப்

பக்கத்துப் பல்லி பட்டென, .. ..

.. .. .. கல் அளைப் பள்ளி வசதியும்

நாடன்!' (நற்:98:1-7)

(2) இருள் - darkness

'ஏ கல் அடுக்கத்து இருள் அளைச்

சிலம்பின்' (அகம்.52:5)

(3) புலப்பாடின்மை - invisible

'மாய இருள் அளை மாய் கல்

போல' (அகம்.2548:7)

(ஆ) முகை Mukai

(4) இருள் - darkness

'ஏ கல் அடுக்கத்து இருள் முகை

இருந்த' (நற்.116:10)

(5) எதிரொலி --echo

'பாடு இமிழ் விடர் முகை முழங்க'

(நற்.156:9)

(6) மறைதல் - to hide

'விடர் முகைச் செறிந்த வெஞ் சின

இரும் புலி' (நற்.158:5)

(7) அச்சம் -fear

'அஞ்சு வரு விடர் முகை ஆர்

இருள் அகற்றி' (அகம்.272:4)

(இ) முழை Mulai

(8) எதிரொலி - echo