பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனிச்சம்

அனிச்சம் Aniccam (a flower)

(1) மேன்மை - soft

'மோப்பக் குழையும் அனிச்சம்

முகம்திரிந்து நோக்கக் குழையும்

விருந்து' (குறள் .90)

(2) நொய்ம்மை - tender / fragile

'ஐய ஆம் அனிச்சப் போதின்

அதிகமும் நொய்ய ஆடல்'

(கம்ப.பால.1077:1)

(3) தன்மை / குளிர்ச்சி - cool

'தாமே தமக்கொப்பு மற்றில்லவர்

தில்லைத் தன்னிச்சப் பூமேல்

மிதிக்கிற் பதைத்தடி பொங்கு

நந்காயெரியும்' (திருக்கோ.16:

228.1-2)

அனுமன் Anuman (Hanuman)

(1) ஆண்மை, வீரம் - manliness,

valour

'ஆண் தொழில் அனுமன்

அவரோடு ஏகினான்'

(கம்ப.சுந்.1063:1)

(ஆ) வலிமை, அறிவுத்திறன் - power,

intelligence

'மாருதி இன்னம் செல்லின் மற்று

இவன் அன்றி வந்து சாருநர்

வலியோர் இல்லை என்பது சாரும்

அன்றே ஆர் இனி ஏகத் தக்கார்?

அங்கதன் அமையும் ஒன்னார்

வீரமே விளைப்பரேனும் தீது

இன்றி மீள வல்லான்'

(கம்ப.யுத்.923)

A (cow)

(1) நன்மை - good

'ஆவொடு பட்ட நிமித்தம் கூறலும்'

(தொல்.1123)

(2) பயன், வளமை - use,prosperous

'பல் ஆ பயந்த நெய்யின்'

(குறு.210:2)

(3) அமைதி / சாந்தம் - peace

'ஆ முனியா ஏறு போல், வைகல்

பதின்மரைக் காமுற்றுச் செவ்வாய்'

(கலி.108:49-50)


(4) ஈகை - benevolence

'இரவலர் கன்றாக ஈவார் ஆவாக

விரகிற் சுரப்பதாம் வன்மை'

(நாலடி.279:1-2)

(5) பாதுகாத்தல் / புரத்தல் - protect/

provide

'அந்நாள் அவனை ஓம்பிய நல் ஆ'

(மணி.15:2)

(6) பிறரைப் பேணல் - care of others

'தன்னலம் பிறர்தொழத் தான்

சென்றெய்தி ஈனா முன்னம்

இன்னுயிர்க்கு எல்லாம்

தான்முலை சுரந்து தன்பால்

ஊட்டலும்' மணி.15:6-8)

(ஆ) கூழை ஆ Kulai a (dwarf

cow)

(7) துன்பம் - suffer

'இரைக்கும் வாடை இருள் கூர்

பொழுதில் துளியுடைத்

தொழுவின் துணிதல் அற்றத்து ,

உச்சிக் கட்டிய கூழை ஆவின்

நிலை என, ஒருவேன் ஆகி

உலமர, கழியும், இப்பகல் மடி

பொழுதே' (நற்.109:6-10)

(இ) சேதா Ceta (brown cow)

(8) தலைவன் - hero

'கன்று கால்யாத்த மன்றப் பலவின்

வேர்க் கொண்டு தூங்கும் கொழுஞ்

சுளைப் பெரும் பழம் குழவிச்

சேதா மாந்தி' (நற்.213:2-4)

(9) தலைவி - herine

'சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச்

சேதா அலங்கு குலைக் காந்தள்

தீண்டி, தாது உக, கன்று தாய்

மருளும் குன்ற நாடன்'

(நற்.359:1-3)

(ஈ) ஓர்ஆன் Or an (lone cow)

(10) வறுமை - poverty

'ஓர் ஆன் வல்சிச் சீரில் வாழ்க்கை'

(குறு.295:4)

(உ) ஈற்று ஆ Irru a (recently

calved cow)

(11) விரைவு - speed

'கன்று சேர்ந்தார்கண் கத ஈற்றாச்

சென்றாங்கு' (கலி.116:8-9)

(12) தாய்மை - motherhood