பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆடூஉ

பனையத்து வேர் முதலாக் கடைக்

குளத்துக் கயம் காய ,... அது

கண்டு யாமும் பிறரும் பல்வேறு

இரவலர் , .... அழிந்து

நெஞ்சம் மடி உளம் பரப்ப,

அஞ்சினம்; எழு நாள் வந்தன்று,

இன்றே; .. .. .. மேலோர்

உலகம் எய்தினன்;' (புறம்.229)

மே.காண். 'தகர்' 'வெள்ளை'

(ஒப்பு) Aries, Ram அமைதி,

ஆண்மை, ஆற்றல், சூரிய

ஆற்றல், தியாகம், தூண்டுதிறம்,

தொடக்கம், படைப்பு, மீட்பு,

வளமை.


ஆடூஉ Atuu (male)

(1) பெருமை, உரன் / வலிமை -

proud, strength

'பெருமையும் உரனும் ஆடூஉ மேன'

(தொல்.1044)

(2) கொடுமை - cruelty

'வெப்புடை ஆடூஉச்

செத்தனென்மன்' (பதி.86;4)


(ஆ) ஆண் An

(3) வலிமை, ஆண்மை - strength,

virility

'கல்வியென் என்னும், வல்ஆண்

சிறாஅன்' (புறம்.346:3)

(4) வீரம் - valour

'ஆண்அணி புகுதலும், அழிபடை

தாங்கலும்' (சிறு.211)

(இ) ஆடவர் Atavar

(5) செயல்திறன் - work efficiency

'வினையே ஆடவர்க்கு உயிரே'

(குறு.135:1)

(6) ஆள்வினைமை - enthusiasm

'அருள் அன்று ஆக, ஆள்வினை,

ஆடவர் பொருள் என வலித்த பொருள் அல் காட்சியின்'

(அகம்.75:1-2)

ஆடை (dress) பார். 'உடுக்கை'


ஆணி

ஆண்டலை Antalai (legendary bird

with human head)

(1) தீமை - evil,bad

'ஆண்டலை வழங்கும் கான்

உணங்கு கடு நெறி' (பதி.25:8)

மே.காண். 'கூகை ஒலித்தல்'

ஆண்களின் கண் மற்றும் தோள்

இடம் துடித்தல் Ankalin kan marrum tol

itam tutittal

(1) தீமை, இறப்பு, அழிவு, துன்பம்

- evil,death,destruction, sorrow

.. .. .. வயவர் தோளும்

நாட்டமும் இடம் துடிக்கின்றன'

(கம்ப.ஆரண்.430: 1-2)

ஆண் யானைகளின் தந்தம்

ஓடியப்பெறுதல் An yanaikalin tantam

otiyapperital

(1) தீமை, இறப்பு, அழிவு - evil,

death,destruction

'.. .. .. பெருங் கவுள் வேழம்

ஓடியுமால் மருப்பு'

(கம்ப.ஆரண்.431:1-2)

ஆணி Ani (axle)

(1) அடிப்படை, முதன்மை - basic,

first

'உலகிற்கு ஆணியாகப் பலர்

தொழ' (நற்.139:1)

(2) ஆதாரம் - basis / foundation

'உழுவார் உலகத்தார்க்கு ஆணி

அஃது ஆற்றாது எழுவாரை

எல்லாம் பொறுத்து' (குறள்.1032)

(3) உறுதி - strong

'ஆணியாக் கொண்ட கருமம்

பதிற்றாண்டும் பாணித்தே செய்ப

வியங்கொள்ளின் - காணி

பயவாமல் செய்வாரார் தஞ்சாகா

டேனும் உயவாமல் சேறலோ இல்'

(பழமொழி.168)

(4) நிலைத்த தன்மை - stable,

permanent

'நீள் நிலாவின் இசை நிறை தன்

குலத்து ஆணி ஆய பழி வர

அன்னது' (கம்ப.ஆரண்.1045:1-2)

(5)வலிமை - strength