பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணி

'ஆணி போல நீ ஆற்ற

வலியைகாண்' (திருநா.தேவா.1017:

1)

(6) அறம் - virtue

'சேண் உயர் தருமத்தின் தேவை

செம்மையின் ஆணியை அன்னது

நினைக்கல் ஆகுமோ'

(கம்ப.அயோ.1103:1-2)

(ஆ) அச்சு Accu

(7) உதவி, காவல், பாதுகாப்பு -

help,secure,safety

'எருதே இளைய; நுகம் உணராவோ:

சகடம் பண்டம் பெரிது

பெய்தன்றே; அவல் இழியினும்,

மிசை ஏறினும், அவணது

அறியுநர் யார்? என உமணர்

கீழ்மரத்து யாத்த செம அச்சு

அன்ன, இசை விளங்கு கவி கை

நெடியோய்' (புறம்.102;1-6)

(8) உயிர் - life

'பண்டம் அறியார் படுசாந்தும்

கோதையும் கண்டு பாராட்டுவார்

கண்டிலர்கொல் - மண்டிப்

பெடைச்சேவல் வன்கழுகு

பேர்த்திட்டுக் குத்தும்

முடைச்சாகாடு அச்சிற்று உழி'

(நாலடி.48)


(இ) அச்சாணி Accani

(9) திட்பம், ஆதாரம் - firmness,

source

'உருவு கண்டு எள்ளாமை

வேண்டும் உருள் பெருந்தேர்க்கு

அச்சு ஆணி அன்னார் உடைத்து'

(குறள்.667)

(ஈ) பகலாணி Pakalani

(10) நடுவுநிலைமை, உறுதி -

impartial, strong

'தத்தமக்குக் கொண்டா குறியே

தவமல்ல செத்துக சாந்து

படுக்கமனன் - ஒத்துச் சகத்தனாய்

நின்றொழுகும் சால்பு தவமே

நுகத்துப் பகலாணி போன்று'

(பழமொழி.339)

(ஒப்பு) Axle / Axis, Nail ஆணி,

ஆதாரம், இணைப்பு, இலிங்க

உரு, ஈட்டி, உலக அச்சு,

ஆம்பல்

துருவம், தூண், நிலைத்தன்மை,

நூற்பு ஆணி, பாதுகாப்பு,

முதுகெலும்பு, மையம், விடாப்பிடி;

ஊடுருவுதல், தீமையை விரட்டுதல்,

ஆதன் Atan

(1) அறிவின்மை - foolishness

'ஆத னாற்குறந் தாங்கெழு

வான்றும்ம' (நீலகேசி.212:1)

ஆதிரை Atirai (a star)

(1) முதன்மை - prime

'ஆதியன் ஆதிரையன் அனலாடிய

ஆரழகன்' (திருஞா.தேவா.2557:1)

ஆதிரை Atirai

(1) கற்பு

'வான் தரு கற்பின் மணியுறை

மகளிரில் தான் தனியோங்கிய

தகைமையள் அன்றோ ஆதிரை

நல்லாள்' (மணி.15:77-79)

ஆந்தை (owl) பார். 'கூகை'

ஆபுத்திரன் Aputtiran (cowson)

(1) உணவுக்கொடை

'மாயிரு ஞாலத்து மன்னுயிர்

ஓம்பும் ஆருயிர் முதல்வன்

தன்முன் தோன்றி' (மணி.14:32-

33)

ஆம்பல் Ampal(a water flower}

(1) வளம் / செழுமை - fertility

'ஆம்பல் அமன்ற தீம் பெரும்

பழனத்து'(நற்.200:6)

(2) தன்மை - cool

'ஆம்பல் மலரினும் தான்தணியளே' (குறு.84:5)

(3) தலைவி - heroine

'அணி நடை எருமை ஆடிய

அள்ளல் மணி நிற நெய்தல்

ஆம்பலொடு கலிக்கும்'

(ஐங்.96:1-2)

(4) பரத்தை - prostitute

'துறைமீன் வழங்கும் பெருநீர்ப்

பொய்கை அறிமலர் ஆம்பல்

மேய்ந்த நெறிமருப்பு ஈர்ந்தண்

எருமை' (அகம்.316:1-3)