பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரம்

'தண்தரள வெண்கவிகைத்

தார்வளவர் சோணாட்டில்'

(பெரிய.608:3-4)

ஆரம் Aram (sandalwood)

(1) நறுமணம் - fragarance

'குறவர் கொன்ற குறைக் கொடி

நறைப் பவர் நறுங் காழ் ஆரம்

சுற்றுவன அகைப்ப' (நற்.5:3-4)

(2) தன்மை - cool

'மன்உயிர் அறியாத் துன்அரும்

பொதியில் சூருடை அடுக்கத்து

ஆரம் கடுப்ப வேனிலானே

தண்ணியள்' (குறு.376:1-3)

(ஆ) சாந்து Cantu

நறுமணம் - fragarance

'கமழ் நறுஞ் சாந்தின் அவரவர்

திளைப்ப' (பரி.17:24)

(3) வளமை - fertile

'சாந்து தலைக்கொண்ட ஓங்கு

பெருஞ் சாரல்' (நற்.328:9)

(4) புகழ்

'புகழ்மிகு சாந்தெறிந்து புல்லெரி

ஊட்டி' (திணை.ஐம்.1:1)

(இ) சாந்தம் Cantam

நறுமணம் - fragarance

'சாந்தம் போகிய தேம் கமழ் விடர்

முகை' (நற்.261:8)

வளமை - fertility

'சாந்தம் பொறைமரம் ஆக,

நறைனநார் வேங்கைக் கண்ணியன்

இழிதரு நாடற்கு இன்தீம் பலவின்

ஏர்கெழு செல்வத்து எந்தையும்

எதிர்ந்தனன் கொடையே'

(அகம்.282:9-12)

(ஈ) சந்து Cantu

(5) மேன்மை

'சுரும்பிவர் சந்தும் தொடுகடன்

முத்தும் வெண் சங்குமெங்கும்

விரும்பினர் பாற்சென்று

மெய்க்கணியாம் வியன் கங்கை

என்னும்' (திருக்கோ.16:248.1-

2)

(ஒப்பு) Sandalwood அயல்வரவு,

கடவுட்டன்மை, கடவுள் வழிபாடு,

ஆலத்து இலை



சடங்குகள், நறுமணம்,

விலைமதிப்பு, விழாக்கள்.

ஆரல் Aral (a fish)

(1) நீர் உயிர் / ஆன்மா - water

creature/soul

'பிணர்மோட்டு நந்தின் பேழ்வாய்

ஏற்றை கதிர்மூக்கு ஆரல் களவன்

ஆக நெடுநீர்ப் பொய்கைத்

துணையொடு புணரும்'

(அகம்.246:1-3)

ஆல் (banyan tree) பார். 'ஆலம்'

ஆல் அமர் செல்வன் Al amar celvan

(Shiva)

(1) வெற்றி - victory

'ஆல் அமர் செல்வன் அணிசால்

பெருவிறல்' (கலி.81:9)

(ஆ) அருந்தவ முதல்வன்

Aruntava mutalvan

(2) புகழ்ச்சி, பொய்யாமை - fame,

truth

'ஐயம் தீர்ந்து யார் கண்ணும் அருந்

தவ முதல்வன்போல் பொய் கூறாய்

என நின்னைப் புகழ்வது

கெடாதோதான்' (கலி.100:7-8)

(இ) முக்கட் செல்வன் Mukkat

celvan

(3) புகழ் - fame

'ஞாலம் நாறும் நலம்கெழு

நல்இசை, நான்மறை முதுநூல்

முக்கட் செல்வன்'

(அகம்.181:15-16)

(ஒப்பு) Shiva உலகின்

சமன்நிலை, தியானத்தின்

உச்சநிலை, படைப்பு, புலனுணர்வு,

வானுலக நிலைபேறாக்கம்; அழிவு,

இருள், கடுமை, சினம்.

ஆலத்து இலை Alattu ilai

(1) தாங்குதல் - support

'ஆலத்து இலையான் அரவின்

அணை மேலான்' (நாலா.177:1)