பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆலம்

ஆலம் Alam (banyan tree)

(1) கடவுட்டன்மை - divinity

'நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து'

(நற்.343:4)

(2) தொன்மை, கோசர் - ancient,

totem of kocar

'தொல் மூதாலத்துப் பொதியில்

தோன்றிய நால் ஊர்க் கோசர்'

(குறு.15:2-3)

(3) விரிவு / பரப்பு - broad/spread

'அழல் புரை குழை கொழு நிழல்

தரும் பல சினை ஆலமும்,

கடம்பும், நல் யாற்று நடுவும்'

(பரி.4:66-67)

(4) முன்னோர் / மூத்தோர் / மரபு -

ancestors/elders/tradition

'முழு முதல் தொலைந்த கோளி

ஆலத்துக் கொழு நிழல்

நெடுஞ்சினை வீழ் பொறுத்தாங்கு,

தொல்லோர் மாய்ந்தெனத்

துளங்கள் செல்லாது, நல் இசை

முதுகுடி நடுக்கு அறத் தழீஇ'

(புறம்.58:2-5)

(5) பேரளவு - huge

'எமரிது செய்க எமக்கென்று

வேந்தன் தமரைத் தலைவைத்த

காலைத் - தமரவற்கு வேலின்வா

யாயினும் வீழார்

மறுத்துரைப்பின் ஆலென்னிற்

பூலென்னு மாறு' (பழமொழி.268)

(ஆ) ஆலமரம் Alamaram

(6) தந்தைமை - fatherhood

'சிதலை தினப்பட்ட ஆல மரத்தை

மதலையாய் மற்றதன் வீழூன்றி

யாங்குக் குதலைமை தந்தைகட்

தோன்றிற்றான் பெற்ற புதல்வன்

மறைப்பக் கெடும்' (நாலடி.197)

(இ) ஆல் Al

(7) அழிவின்மை, நிலைபேறு - not

destroyed, stable

'மும்முறை உலகம் எல்லாம்

மும்முற முடிவது ஆன அம்முறை

ஐயன் வைகும் ஆல் என நின்றது

அம்மா' (கம்ப.சுந்.737:3- 4)

(8) அறம் - virtue

'ஆல் அதனில் அறம் நால்வர்க்கு

அளித்தார் போலும்'

(திருநா.தேவா.1117:3)

ஆவி



(ஒப்பு) Banyan Tree அளவின்மை,

கட்டுறுதி, நிலைபேறு, விரிவு.

ஆலம்வித்து

(1) சிறுமை, மிகுபயன், சிறிய அளவு

- small, minute,abundance

'உறக்கும் துணையதோர்

ஆலம்வித்து ஈண்டி இறப்ப நிழல்

பயந்தாஅங் - கறப்பயனும்'

(நாலடி.38:1-2)

(ஆ) ஆல் அமர் வித்து Al amar

vittu

(2) குறுகிய தன்மை - dwarfed

appearence

'காலம் நுனித்து உணர் காசிபன்

என்னும் வால் அறிவதற்கு

அதிதிக்கு ஒரு மகவு ஆய் நீல

நிறத்து நெடுந்தகை வந்து ஒரு ஆல்

அமர் வித்தின் அருங்குறள்

ஆனான்' (கம்ப.பால.419)

(இ) ஆலமும் வித்தும் Alamum

vittum

(3) ஆற்றல், செறிவு - controlled

capacity

'ஆலமும் வித்தும் ஒத்து அடங்கும்

ஆண்மையான்' (கம்ப.யுத்.203:4)

ஆலம்வீழ் Alamvil

(1) தாங்குதல் - support

'கோல் அஞ்சி வாழும் குடியும்

குடிதழீஇ ஆலம்வீழ் போலும்

அமைச்சனும்' (திரி.33:1-2)

ஆலமரம் (banyan tree) பார்.

'ஆலம்'

ஆலி Ali (hail stone)

(1) தன்மை - cool

'நீலத்து அன்ன நீர்பொதி

கருவின், மாவிசும்பு

அதிரமுழங்கி, ஆலியின் நிலம்

தண்ணென்று கானம் குழைப்ப'

(அகம்.314: 1-3)

ஆவி (life,soul) பார். 'உயிர்'