பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆவி

ஆவி Avi (vapour)

(1) நிலையாமை, அழிவு

transitoriness, destruction

'எள் அற இயற்றிய நிழல் காண்

மண்டிலத்து உள் ஊது ஆவியின்

பைப்பய நுணுகி, மதுகை மாய்தல்

வேண்டும்' (அகம்.71:13-15)

(2) நுண்மை, வெண்மை, மென்மை

minute,white, soft

'ஆவி நுண்துகில் யாப்புறுத்

தாயினும் சாவது உறுதியான்

தப்பிய பின்றை' (பெருங்.உஞ்.36:

64-64)

(3) மெல்லிய தன்மை

'பானீர் நெடுங்கடல் பனிநாள்

எழுந்த மேனீர் ஆவியின் மெல்லி

தாகிய' (பெருங்.இலா.7:154-155)

ஆவிரை Avirai (a flower)

(1) அழிவு / நிலையாமை

destruction / transitoriness

'பொன்நேர் ஆவிரை புதுமலர்

மிடைந்த பல்நூல் மாலைப்

பனைபடு கலிமா' (குறு.173:1-2)

(2) அழகு, காமம் - beautiful,

passion

'அணி அலங்கு ஆவிரைப் பூவோடு

எருக்கின்பிணையல் அம் கண்ணி,

மிலைந்து,மணி ஆர்ப்ப, ஓங்கு

பெரும் பெண்ணை மடல் ஊர்ந்து'

(கலி.139:8-10)

ஆழி Ali (wheel)

(1) வலிமை - strength

'வள் வாய் ஆழி உள் வாய்

தோயினும்' (நற்.78:8)

(2) ஆட்சி / ஆளுமை - reign/rule

'ஆழி முதல்வ !' (பரி.2:19)

(3) அறம் - virtue

'அற ஆழி அந்தணன்' (குறள்.8)

(4) அருள் - grace

'ஓரருள் ஆழியை உலகுடை

ஒருவனை' (சூளா.216:2)

(5) வருத்துதல் - affliction


ஆழி



'பகை அணங்காழியும் பால்வெண்

சங்கமும்' (சிலப்.11:47)

(6) வெற்றி

'வடிவார் சோதி வலத்துறையும்

சுடர் ஆழியும் பல்லாண்டு'

(நாலா.2:5-6)

(7) ஒளி, ஆளுகை - light,reign

ஆழி திகழ் திருச்சக்கர'தீ யிற்

பொலிகின்ற செஞ்சுடர் த்தின்

கோயிற் பொறியாலே ஒற்றுண்டு

நின்று குடி குடி

ஆட்செய்கின்றோம்' (நாலா.7:1-4)

(8) விறல், வெற்றி

'வென்றி மிகு நரகன் உரம் அது

அழிய விசிறும் விறல் ஆழித்

தடக் கையன்' (நாலா.1239:1-2)

(ஆ) திகிரி - Tikiri

(9) அறம் - virtue

'அறந் தெரி திகிரிக்கு வழியடை

ஆகும்' (பதி.22:4)

(10) வெற்றி - victory

'வலம் படு திகிரி வாய் நீ வுதியே'

(கலி.7:14)

(11) சுழற்சி , மனமயக்கம்

'இருவர் நெஞ்சமும் இடைவிடல்

இன்றித் திரிதரல் ஓயாது

திகிரியில் சுழல' (பெருங்.உஞ்.33)

199-200)

(12) குற்றமின்மை

'மறுவற உணர்ந்தனை மலமறு

திகிரியை' (சீவக.2563:1)

(இ) நேமி Nemi

(13) நிழல் /பாதுகாப்பு - shade/safety

'தாமரைப் பொருட்டு நின்நேமி

நிழலே !' (பரி.3:94)

(14) இறைத்தன்மை / அருள் -

divinity/grace

'தண் அளி கொண்ட அணங்குடை

நேமி மால் !' (பரி.13:6)

(15) வெற்றி - victory

'வலம்புரி வய நேமியவை'

(பரி.15:59)

(16) புகழ் - fame

'பொரு முரண் மேம்பட்ட பொலம்

புனை புகழ் நேமி' (கலி.104:9)

(17) காலம்

'வடம் கலந்த மாலை மார்ப கால

நேமி காலனே'(நாலா.789:7)