பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழி

(ஈ) சகடக்கால் Cakatakkal

(18) நிலையாமை, மாறும் இயல்பு

transitoriness, change

'துகள்தீர் பெருஞ்செல்வம்

தோன்றியக்கால் தொட்டுப் பகடு

நடந்தகூழ் பல்லாரோடு உண்க

அகடுற யார்மாட்டும் நில்லாது

செல்வம் சகடக்கால் போல வரும்'

(நாலடி.2)

(உ) சக்கரத்தாழி Cakkarattali

(19) வளைவு, ஆட்சி, ஆளுகை,

அதிகாரம் - curve, rule, power

'வள வயலூரன் மருளுரைக்கும்

மாதர் வளைஇய சக்கரத் தாழி'

(ஐந்.எழு.54:1-2}

(ஊ) ஆழிக்கால் Alikkal

(20) மாற்றம் - change

'ஆக்கமும் கேடும் யாக்கை சார்வா

ஆழிக்காலில் கீழ்மேல் வருதல்

வாய்மையாம் என மனத்தின்

நினைஇ' (பெருங்.மகத.6:34-36)

(எ) உருளும் சகடம் Urulum

cakatam

(21) வஞ்சம்

'மருதின் நடந்து நின் மாமன் செய்

வஞ்ச உருளுஞ் சகடம்

உதைத்தருள் செய்குவாய்'

(சிலப்.12:23)

(ஏ) ஏகத்திகிரி Ekatikiri

(22) ஒப்பின்மை, தலைமை

'நாகத்து அன்ன நன்னகர்

வரைப்பின் ஏகத் திகிரி

இருநிலத்து இறைவன்'

(பெருங்.உஞ்.48:83-84)

(ஐ) சக்கரம் Cakkaram

(23) காலம்

'கணை நெடுங் கதழ்பரிக் காலச்

சக்கரமும் போல்'(சீவக.1839;2)

(24) பிறவி

'பிறவிச் சக்கரமிது பெரிதும்

அஞ்சினான்' (சூளா.2072:1)


(ஒ) மாயச்சகடு Mayaccuvatu

ஆளி



(25) அழிவு

'பேயின் முலை உண்ட பிள்ளை

இவன் முன்னம் மாயச் சகடும்

மருதும் இறுத்தவன்' (நாலா.163:1-

2)

(ஒ) தனித்திகிரி Tanittikiri

(26) ஒப்பின்மை, வலிமை

uncomparable, strength

'விரிகதிர் பரப்பி உலக

முழுதாண்ட ஒரு தனித் திகிரி

உரவோற் காணேன்' (சிலப்.4:1-2)

(ஒப்பு) Wheel, Chakra ஆற்றல்,

உடலின் ஆற்றல் மையம்,

எட்டுத் திசைகள், எதிர்கால

நிலை, கடந்த நிலை, காலம்,

சூரியன், நிலைபேறு, நீதி,

புதுப்பித்தல், போர்வீரர்,

மறுபிறப்பு, முழுமையான

முடிவுற்ற நிலை, வாழ்க்கை,

வாழ்வின் மாற்றம், விதி, விஷ்ணு,

வெட்டும் ஆயுதம்: சித்திரவதை.


ஆள் Al (man)

(1) கணவன் - husband

'ஆள் இல் பெண்டிர் தாளின்

செய்த நுணங்கு நுண் பனுவல்

போல' (நற்.353:1-2)

(2) ஆண்மை - virility

'தலை துமிந்து எஞ்சிய ஆள் மலி

யூபமோடு' (பதி.67:10)

(3) மதிப்பு - honour

'குழவி இறப்பினும், ஊன்தடி

பிறப்பினும், ஆள் அன்று என்று

வாளின் தப்பார்'(புறம்.74:1-2)

ஆளி Ali (a fabulous animal)

(1) வலிமை - strength

'ஆளி நன் மான் அணங்குடைக்

குருளை மீளி மொய்ம்பின் மிகு

வலி செருக்கி' (பொரு.139-140)

(2) ஆண்மை, வலிமை

'ஆண்தகை ஆளி மொய்ம்பின்

ஐயநீர் அளித்த செல்வம்'

(கம்ப,கிட்.627:3)

(3) விறல் / வெற்றி, சினம்