பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆற்றில் கெடுத்துக்

'பெருவிறல் ஆளி என்னப்

பிறங்கெரி சிதற நோக்கி'

(பெரிய.3.17)

(ஆ) வயமா Vayama

திறல் / வலிமை

'சீயம் ஆயிரம் செகுத்திடும்

திரலது வயமா' (சூளா.724:1)

ஆற்றில் கெடுத்துக் குளத்தினில்

தேடிய ஆதர் Arril ketuttuk kulattinil

tetiya atar

(1) பயனின்மை - useless

'தேற்றப்படத் திருநல்லூர் அகத்தே

சிவன் இருந்தால் தோற்றப்படச்

சென்று கண்டுகொள்ளார்

தொண்டர் துன்மதியால் ஆற்றில்

கெடுத்துக் குளத்தினில் தேடிய

ஆதரைப் போல் காற்றில் கடுத்து

உலகெல்லாம் திரிதர்வர்

காண்பதற்கே' (திருநா.தேவா.891)

ஆறு (river) பார். 'புனல்'

ஆறு (way) பார். 'அதர்'

ஆறு Aru (six)

(1) வித்தியா தத்துவங்கள் -

philosophical concepts

'அறுபதும் பத்தும் எட்டும்

ஆறினோடு அஞ்சும் நன்கும்

துறுபறித்து அனைய நோக்கி'

(சுந்.தேவா.926:1-2)

(2) ஆறு குற்றங்கள்

'அஞ்சும் ஒன்றி ஆறுவீசி நீறுபூசி

மேனியில்'(திருஞா.தேவா.926:1-2)

(3) மறையின் அங்கங்கள்

'நாவில்நாலர் உடல் அஞ்சினர்

ஆறர் ஏழோசையர்'

(திருஞான.தேவா.2428:3-4)

(4) ஆறு சுவை

'ஆறுகொலாம் அவர் அங்கம்

படைத்தன ஆறு கொலாம் அவர்தம்

மகனார் முகம் ஆறுகொலாம்

அவர் தார்மிசை வண்டின்கால்

ஆறுகொலாம் சுவை ஆக்கின

தாமே' (திருநா.தேவா.976:3-4)


ஆனை


ஆறொன்று (ஏழு) Aronru (six and one,

seven)

(1) இசை - melody

'ஐயிரண்டும் ஆறொன்றும் ஆனார்

போலும்' (திருநா.தேவா.820:1)

ஆன் அஞ்சு An ancu

(1) சிறப்பு, புனிதம் - great, holy

'ஆன் அஞ்சு ஆடலன் ஆடானை'

(திருஞான.தேவா..3017:2)

ஆன் சாணம் An canam

(1) நன்மை - good

'நலம் மலி ஆன் சாணத்தால் நன்கு

திரு மெழுகிட்டு' (பெரிய.21.44)

ஆன் மணிக்குரல் An manikkural

(resounding bells of cattle)

(1) வருத்தம், துன்பம், இனிமை -

suffer,sorrow,sweetness

'உரும் இசை அறியாச் சிறு செந்

நாவின் ஈர் மணி இன் குரல் ஊர்

நனி இயம்ப, பல் ஆ தந்த கல்லாக்

கோவலர் கொன்றைஅம் தீம்

குழல் மன்று தோறு இயம்ப, உயிர்

செலத் துணைதரும் மாலை'

(நற்.364:7-11)

ஆள்ஏற்று ஒருத்தல் Anerru oruttal

(1) வலிமை - strong

'வான்ஏறு வானத்(து) உரற,

வயமுரண் ஆன்ஏற்(று) ஒருத்தல்

அதனோ(டு) எதிர்செறுப்ப'

(கார்.10:1-2)

ஆனிடை அழித்த புள்

(பசுக்கூட்டத்தினிடையே காரிப்புள்

எழுதல்) Anitai alitta pul

(1) தீமை - evil(omen)

'கானிடை இனநிரை காவல்

போற்றுமின் ஆனிடை

அழித்தபுள் என்று கூறினர்'

(சீவக.1849:3-4)

ஆனை (elephant) பார். "யானை'